பல்டி சிக்கன் - 1

தேதி: June 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (2 votes)

 

கறி மசாலா:

1. மிளகாய் வற்றல் - 8
2. மல்லி - 2 தேக்கரண்டி
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
6. பட்டை - 2 துண்டு
7. லவங்கம் - 5
8. ஏலக்காய் - 5
9. பிரியாணி இலை - 1 பெரிது

கறிக்கு:

10. சிக்கன் - 1/2 கிலோ
11. வெங்காயம் - 1
12. தக்காளி - 1
13. பச்சை மிளகாய் - 2
14. தயிர் - 2 மேஜைக்கரண்டி
15. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
16. கறி மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
17. மஞ்சள் தூள்
18. உப்பு
19. கறிவேப்பிலை, கொத்தமல்லி
20. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி


 

கறி மசாலா செய்ய தேவையான அனைத்தையும் தனி தனியாக கடாயில் வறுத்து பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தயிர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி சிக்கனை சேர்த்து பிரட்டி மூடவும்.
சிக்கன் பாதி வெந்து இருக்கும் போது கறி மசாலா தூள் சேர்த்து கலந்து வேக விடவும்.
கறி நன்றாக வெந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி எடுக்கவும்.


சுவையான இந்த மசாலா ரொட்டி, நாண் போன்றவைக்கு நல்ல் ஜோடி. பல்டி (Balti) கறி வகைகள் பாகிஸ்தானின் Baltistan என்ற பகுதியை சேர்ந்தவை. மெல்லிய இரும்பு கடாயில் (balti pan) சமைத்து அதிலேயே பரிமாறுவதனால் அந்த பெயர். இதிலும் பல வகை உண்டு. பல்டி பனீர், பல்டி மட்டன், பல்டி ப்ரான் என் அடுக்கி கொண்டே போகலாம்.

மேலும் சில குறிப்புகள்