முட்டை க்ரேவி

தேதி: June 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (16 votes)

 

1. முட்டை - 6
2. வெங்காயம் - 1
3. பச்சை மிளகாய் - 2
4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
5. எள் - 2 மேஜைக்கரண்டி
6. கசகசா - 1/2 மேஜைக்கரண்டி
7. சீரகம் - 1/4 தேக்கரண்டி
8. காய்ந்த மிளகாய் - 2
9. கறிவேப்பிலை
10. உப்பு
11. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
12. புளி - 1 நெல்லிக்காய் அளவு
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
15. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
16. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
17. சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
18. பூண்டு பல் - 2


 

முட்டையை வேக வைத்து ஓடு எடுத்து மேலே கத்தியால் கோடிட்டு வைக்கவும்.
வெறும் கடாயில் எள், கசகசா சேர்த்து வறுக்கவும்.
இத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான நீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
இப்போது தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி தேவையான நீர் விட்டு கொதி வந்ததும் முட்டை சேர்த்து விடவும்.
முட்டை சேர்த்து கொதி வந்ததும் புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதித்து க்ரேவி திக் ஆனதும் எடுக்கவும்.
சுவையான முட்டை க்ரேவி தயார்.


சாதம், ரொட்டி, பூரி, இட்லி, தோசை அனைத்துக்கும் ஏற்றது. விரும்பினால் ஒரு தேக்கரண்டி வேர்கடலை வறுத்து சேர்த்து அரைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Super Dish...................

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நீங்க எள்ளை நிறைய சமையலில் சேர்க்கறீங்க .எதுக்கெல்லாம் எள்ளு பொருந்தும்.?
டோட்டலா சொன்னா நினைவு வைக்க வசதியா இருக்கும்

எள் எப்பவுமே மனமா இருக்கும். அதனால் அதிகம் சேர்ப்பேன். கூடவே எள் எண்ணெய் சத்தும், இரும்புச்சத்தும், ப்ரோட்டீனும் நிறைந்தது. கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் பாதுகாக்கும்.

எள் மிட்டாய் செய்யலாம், சிக்கன் வறுவலில் சேர்க்கலாம், மீன் மாவில் முக்கி வறுக்கும் போது மேலே தூவலாம், காய்கறிகள் ட்ரையாக செய்யும்போது தூவலாம், இது போல மசாலா வகைகளில் சேர்க்கலாம், புளி சாதம் போன்றவற்றில் சேர்க்கலாம், முருக்கு, சீடை, இனிப்பு வகைகள், பேக்கரி வகைகளில், இட்லி பொடி தயாரிக்கும் போது, சாஸ் செய்ய, எந்த சாத வகைக்கும் சேர்க்கலாம், போளி போன்றவை, கொழுக்கட்டை போன்றவற்றில் உள்ளே வைக்கும் பூரனமாக பயன்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி
முதலில் காய்களில் ட்ரையாக செய்யும் போது சேர்த்து பார்க்கிறேன்.

வெறும் கடாயில் வறுத்து மேல தூவி செய்யுங்க. :) உருளையில் சேருங்க, ரொம்ப நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனி தெளிவா சொன்னதுக்கு கட்டாயம் செய்யறேன்

wow superb......! then ethula thakkali sertha nalla erukkuma

மிக்க நன்றி. எள்ளு சேர்ப்பதில் தக்காளி சேர்த்தா சுவை சரியா வராது. கூடவே இந்த க்ரேவி ஸ்மூத்தா இருக்கணும்... தக்காளி சேர்த்தால் அது போயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் இந்த முட்டை கிரேவி செய்தேன் சுவை நன்றாக இருந்தது. விருப்ப படியலில் சேர்த்துவிட்டென்.வாழ்த்துக்கள். நன்றி.

Dreams Come True..

செய்தேன் இன்று...நல்ல மணமா டேஸ்டா இருக்கு.நல்ல சுவையான குறிப்புக்கு நன்றி வனிக்கா :)

Kalai