ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா

தேதி: June 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (4 votes)

 

ஸ்ட்ராபெர்ரி - 15 - 20
சர்க்கரை - அரை கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா இலை - 5


 

ஸ்ட்ராபெர்ரியை கழுவி துடைத்து இலைகளை நீக்கி நறுக்கி வைக்கவும்.
சர்க்கரை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு இப்படி இருக்கும். தண்ணீரை தனியே வடிகட்டி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மட்டும் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலை சேர்த்து அரைக்கவும்.
வடிக்கட்டி ஏற்கனவே தனியே எடுத்து வைத்துள்ள நீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கிளிங் வ்ராப் போட்டு மூடி பிரீசரில் வைக்கவும்.
முக்கால் மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து ஒரு முள் கரண்டியால் கீறி விடவும். திரும்பவும் பிரீசரில் வைக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும். மூன்றாவது முறை இரவு முழுக்க வைத்திருக்கவும்.
பரிமாறும் ஒரு மணி நேரத்திருக்கு முன்பு அதே போல் எடுத்து கிளறி பிரீசரில் அல்லாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து பரிமாறவும். அப்படியே க்ரிஸ்டல் போல் இருக்கும். புதினா எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் ரிஃப்ரெஷிங்கா இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

லாவி

கலர் கண்ணை பறிக்குது.
அழகோ அழகு :)
விருதுக்கு தயாராகும் படைப்பு..
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பரோ சூப்பர். படம்... சும்மா கலக்குது.

‍- இமா க்றிஸ்

சம சூப்பர். எனக்கு மட்டும் அவார்ட் கொடுக்க பெர்மிஷன் இருந்தா இந்த குறிப்புக்கு இங்கையே கொடுத்துடுவேன் ;) என்ன பண்ண... பெரிய தலை மூனு பேரும் எனக்கு அந்த ரைட்ஸ கொடுக்கலயே.... அட்டகாசமா இருக்கு ப்ரெசண்டேஷன். கலக்கிட்டீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு லாவண்யா

படங்கள் கண்ணைப் பறிக்குது!

புதினாவும் லெமனும் சேர்த்திருப்பதால், சுவை சூப்பராக இருக்கும்.

இங்கே ஸ்ட்ராபெர்ரி கிடைப்பது சிரமம். அதனால் என் பங்கு க்ரானிட்டாவையும் நீங்களே சாப்பிட்டுடுங்க, பெர்மிஷன் க்ராண்டட்.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

அப்படியா சொல்றீங்க ரம்மி.....சரி விடுங்க அடுத்த தடவை எச்சரிக்கை விட்டு கண்ணை காப்பாத்திடுவோம் ;) விருதா? அப்போ நீங்க இந்த தடவை செலெக்ஷன் கமிட்டியா? சொல்லவே இல்லை :) மிக்க நன்றி.

இமா உங்க கிட்டேயிருந்து பாராட்டுன்ன அது மனதுக்கு இதமா தான் இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி.

உங்களுக்கு யாரு அந்த ரைட்ஸ் இல்லைன்னு சொன்னது. இந்த தடவை நான் தான் பட்டியல் போடப் போகிறேன். யார்கிட்டே பெர்மிஷன் வாங்கனும்னு சொல்லுங்க. நீங்க நடுவர் ஆயிடுங்க....அப்படியே சொன்னதையும் செய்யனும். சரியா? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்? யாரந்த மூணு பேர்? நன்றி வனி.

சீதாலக்ஷ்மி உங்களுக்கு கண்ணு போச்சா......அடுத்த தடவை நான் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை விடுறேன் :) இங்கே எனக்கே கிடைக்கலை எல்லாத்தையும் என் பொண்ணும் அவ அப்பவுமே சாப்பிட்டாங்க :( நான் வேணா அவ கிட்ட சொல்றேன் "அந்த ஸ்ட்ராலர் தள்ற ஆண்டிக்கும் " சேர்த்து அவளே சாபிடுவா......மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
கண்ணை பறிக்கும் க்ரானிடா..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வெயில் காலம் துவங்கியதும் எல்லாரும் ஒரே க்ராநிடாவா செய்து அசத்துறீங்க... உங்க ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டாவ பார்க்க பார்க்க நாக்கு ஊருது. செம கலருடன் படங்கள் பளீர். வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

லாவி,

ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா சூப்பர்!
புதினாவும், எலுமிச்சையும் சேர்த்து பார்க்கும்போதே புத்துணர்ச்சியா இருக்கு! :) படங்கள் எல்லாமும் சும்மா அசத்துது!

கடைசி படம் + முகப்பில இருக்கும் படம் - வெகு அழகு!
வெரி லவ்லி ப்ரசண்டேஷன் லாவி! :)

அன்புடன்
சுஸ்ரீ