biscuit kudukalama

3 month baby ku biscuit tharalama...

அசச்சோ என்ன அவசரம்?

no

3மாத ஆரம்பத்திலே கொடுக்கலாம் முதலில் பாதி பிஸ்கெட்டை தண்ணீர் அல்லது பால் ஊற்றி கரைத்து கொடுங்க ரெம்ப கட்டியாகவும் இருக்க கூடாது ரெம்ப தண்ணீர் போலவும் இருக்க கூடாது

நான் நாலாவது மாதம் கொடுத்தேன்

பிஸ்கட் மைதாவினால் செய்யப்படுவது. பரோட்டாவும் அதிலே தான் செய்கிறார்கள். என்ன பிஸ்கட் பேக் செய்கிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம். மூன்று மாத குழந்தைக்கு பரோட்டா கொடுக்கலாமா? கூடாதில்லை? ஏன்னா? பின்னே ரெண்டுமே மைதா தானே? பிஸ்கட் மட்டும் எப்படி ஜீரணம் ஆகும்?

குழந்தைக்கு ஆறு மாதம் வரையிலும் தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு நான் இன்றும் இந்த மைதாவினால் ஆனா பொருட்களை கொடுக்க தயங்குவேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்:
1. குழந்தையின் தலை முழுவதுமாக நின்றுவிட்டதா?
2. தனியாகவோ அல்லது எதாவது ஆதரவுடனோ (with or without support ) உக்காருகிறதா?
3. நாம் குழந்தையுடன் பேசும்பொழுதும் கொஞ்சும்போழுதும் தனக்கு ஏதோ கொடுக்க போறாங்க என்று நினைத்து வாயை திறந்து திறந்து பார்க்கும்
இதெல்லாம் நடக்க 5 மாதமாவது ஆகும், அதனால் அதுவரையில் தாய்பால் மட்டுமே கொடுப்பது நல்லது
தாய்பால் இல்லாத தாய்மார்கள் பவுடர் பால் குறைந்தது 4 மாதமாவது கொடுக்கணும், தாய்பால் குறைந்து விட்டது என்று எண்ணும் தாய்மார்கள் பூண்டு, வெந்தயம் போன்ற தாய்பால் சுரக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு பால் சுரப்பை அதிகப்படுத்த வேண்டும், 5 மாதம் ஆகும்போது குழந்தைக்கு பால் போதவில்லை என்று நமக்கு உறுதியாக தெர்யும் பட்சத்தில் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம், மேலும் ஒவொரு மாதமும் குழந்தையும் உயரமும் எடையும் கண்டிப்பாக உயர வேண்டும் அப்படி உயரவில்லை என்றால் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம், 5 ஆவது மாதம் தான் இந்த பிரச்னை உருவாகும், இதெல்லாம் என் பையனுக்கு நேற்று திட உணவு கொடுக்கவா என்று மருத்துவரிடம் கேட்டப்போது அவர் சொன்னது, நான் மேலே கூறிய அனைத்தும் என் குழந்தை செய்வான், ஆனாலும் தாய்ப்பால் போதுமானதாக உள்ளது அதனால் திட உணவு இப்பொழுது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்., அதனால் நீங்கள் இன்னும் 2 மாதங்கள் கழித்து கொடுங்கள், அப்பவும் உங்கள் மருத்துவரை அணுகி விட்டு கொடுக்க ஆரம்பியுங்கள்,...,

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்