குழாய் புட்டு

தேதி: June 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பச்சரிசி மாவு - 1 1/2 கப்
தேங்காய்ப் பூ - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டிக்கும் குறைவாக


 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
பச்சரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசறவும். பிசறிய மாவை, கையில் பிடியாகப் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுதான் சரியான பதம். பொறுமையாக, கட்டியில்லாமல் பிசறி விடவும்.
புட்டுக் குடத்தின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் கொதிக்க விடவும். மேலே குழாய் போன்ற பாகத்தில், கண்ணுள்ள தட்டு இருக்கும் (ஓமப்பொடி அச்சுப் போல இருக்கும்). அதைப் போட்டு பிறகு பிசறிய மாவு கொஞ்சம், தேங்காய்ப் பூ கொஞ்சம், சர்க்கரை கொஞ்சம் என்று வரிசையாக நிரப்பவும்.
குழாய் முழுவதும் மாவு, தேங்காய்ப்பூ, சர்க்கரை போட்டு நிரப்பவும்.
அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் புட்டுக் குடத்தின் அடிப்பாகத்தின் மேல், மாவு நிரப்பிய புட்டுக் குழாயை வைத்து, மூடி போட்டு மூடவும். மூடியின் மேல் இருக்கும் துளையை அதனுடன் இருக்கும் கம்பியால் மூடவும்.
10-15 நிமிடங்கள் வெந்த பிறகு, நல்ல வாசனை வரும். அடுப்பின் தீயைத் தணித்து வைத்து மூடியைத் திறந்து எவர்சில்வர் கம்பியால் குத்திப் பார்த்து பின் அடுப்பை அணைக்கவும். புட்டுக் குழாயின் பிடியை ஒரு பக்கம் பிடித்து எடுத்து ஒரு தட்டில் அதைப் பொறுமையாகத் தட்டவும். பிறகு வேண்டும் விதத்தில் எடுத்து பரிமாறவும். இதனுடன் நேந்திரம்பழம் அல்லது கடலைக் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்.. சீதாலஷ்மி

எனக்கு பிடித்த ஒரு குறிப்பு.
அந்த கடைசி பிளேட்டை அப்படியே எனக்கு குடுங்க :)
ப்ளேட் ரொம்ப அழகு :)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துகள். எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் இது. இதனுடன் கடலை குழம்பு சேர்த்து சாப்பிட்டால் ஆஹா.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சீதாலஷ்மி
பிசிறிய மாவை மிக்சியில் போட்டு ரெண்டு செகண்ட் ஓட விட்டு எடுத்தால் புட்டு கட்டியின்றி ரொம்ப சாஃப்டா வரும்.எங்க பாட்டி அப்படி செய்வாங்க

எங்க வீட்டிலும் இதே குழாய் தான் :) செய்துட ஆசை வந்துட்டுது. அவசியம் புட்டு செய்யனும்... கொஞ்ச நாளா, இட்லி தோசைன்னு போரடிக்குது. சூப்பரா இருக்குங்க குழாபுட்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா,

என்னுடைய favourite இது..
normal மாவே போடலாமா இல்லை பதபடுத்திய புட்டு மாவு தான் போடணுமா?
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

அன்பு ரம்யா,

ரொம்ப நாளா செய்ய நினைச்சு, இப்பதான் செய்ய முடிஞ்சது.
வருகைக்கும், பதிவிற்கும் மிகவும் நன்றி.

அன்பு மஞ்சுளா,

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி. கடலைக் குழம்பு குறிப்பும் செய்து அனுப்பணும்.

அன்பு நிகிலா,

சூப்பர் ஐடியா. இனிமே அப்படியே செய்து பார்க்கிறேன். புட்டு செய்யறதுல சிரம்மாக இருப்பது, மாவு பிசறும் வேலைதான். இனிமேல் சிம்பிள் ஆக செய்துடலாம்.

பகிர்விற்கு நன்றி.

அன்பு வனிதா,

அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. நான் இந்த பாத்திரம் வாங்கி வருஷமாகுது. இப்பதான் செய்யறதுக்கு நேரம் கிடைச்சுது.

பதிவிற்கு மிகவும் நன்றி

அன்பு கவிதா,

நார்மல் மாவே போட்டு செய்யலாம். நான் கடையில் வாங்கிய பாக்கெட் மாவில்தான் செய்திருக்கேன்.

வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி மேடம்,
எங்க வீட்டில எங்க அம்மா ஒவ்வொரு சனிக்கிழமையும் புட்டு செய்வாங்க :) இப்போ உங்க ரெசிபில இருக்கிற போட்டோஸ் பார்த்த உடனேயே சாப்பிடனும் போல இருக்கு:p அது என்னவோ எங்க வீட்டில இருக்கிற புட்டு குழாய்க்கு என்னை பார்த்தாலே ஆகாது :( என்னோட கணவர் கிட்ட இப்போவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வச்சிருக்கேன் இந்த சனிக்கிழமை வீட்டில புட்டு செய்ய :)

எங்கள் வீட்டில் கேரளா (sweet dish) ஸ்டைலில் பச்சை பயிறு, பழம், அப்பளம் எல்லாம் சேர்த்து சாப்பிடுவோம் :) Yummy!

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சீத்தாம்மா,

குழாய் புட்டு நல்லா இருக்கு. எனக்கு புட்டு ரொம்பவே பிடிக்கும். ஆனால் புட்டுகுழாய் இந்தியாவில் இருந்து எடுத்திட்டு வர எங்க ஆத்துகாரர் அனுமதிக்கலை. சோ வேற வழி இல்லாமல் இட்லி குக்கர்லையே செஞ்சிடுவேன். நாங்க இதில் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவோம், சுவை சூப்பரா இருக்கும்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சீதாலஷ்மிமா,

புட்டு நல்லா செய்து காட்டியிருக்கிங்க.
எனக்கு ரொம்ப பிடித்தமான ஐய்ட்டம், செய்துதான் நாளாகிவிட்டது, இப்ப உங்க குறிப்பை பார்க்கவும் செய்து பார்க்க ஆசை வந்துவிட்டது! :)

என்ன?!, செய்தால் நான் மட்டுமே சாப்பிடனும்! :) அது என்னவோ தெரியலை, புட்டுக்கு மட்டும் வீட்டில யாரும் எனக்கு கம்பனி குடுக்கவே மாட்டேங்கறாங்க! :(

வரிசையா உங்க குறிப்புகள் வருவது சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து கொடுங்க‌...

அன்புடன்
சுஸ்ரீ

நான் வேனா உங்க வீட்டுக்கு வந்துடட்டுமா? ;) எனக்கு புட்டுன்னா கொள்ளை பிரியம்.. எப்போ யோசித்தாலும் வயிறு யெஸ் சொல்ற ஒரே உணவு இது தான்.. :) கூட எதுவுமே தொட்டுக் கொள்ள இல்லாமல் சாபிடுவேன் நான்...
ஆனா பாருங்க வீட்ல குழா இல்லே!! உதிர் உதிரா இருக்கிற புட்டை விட அப்படியே குழாய் வடிவிலே இருக்கும் பாருங்க அதுதான் என் விருப்பம்... இந்த ரெசிபி பார்த்ததுலே இருந்து ஒரே புட்டு ஏக்கமா இருக்கு.. :( all credit goes to Seethalakshmi only.. :( :)

சாந்தினி
வீட்ல குழாய் இல்லைன்னா என்ன?
பிசிறிய மாவை அகப்பையில வச்சி அழுத்தி எடுத்தால் இட்லி ஷேப்ல வரும் .அப்படி செய்து பாருங்க.

ஹாய்..

தகவலுக்கு நன்றி.. ஆனா அகப்பைன்னா என்ன என்று எனக்குப் புரியவில்லை... எனக்குத் தெரிந்து அகம்+பை என பிரித்து தான் பார்க்க முடிகிறது.. :P.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க... முயற்சிக்கிறேன்.. :)

சாந்தினி
புரியாத தமிழில் சொல்லிட்டேனா?அது கரண்டி பா

ஹி ஹி ஹி... தூய தமிழ் வார்த்தை தான்னு தெரியும்..ஆனா என்ன செய்ய? ”சட்டியில் இருந்தால் தானே அகப்பை” ல வரும் என சொல்வர்களே! அந்தப் பழமொழி கேள்விப்பட்ட போதிருந்து இருந்த கேள்விக்கு இப்போ உங்க மூலமா விடை கிடைத்து இருக்கு. நன்றி.