தந்தூரி சிக்கன்

தேதி: June 20, 2012

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

1. சிக்கன் தொடை பகுதி - 2
2. மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
3. மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. உப்பு
6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
8. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
9. தயிர் - 1/4 கப் [விரும்பினால்]
10. எண்ணெய் - 1 தேக்கரண்டி [விரும்பினால்]
11. ரெட் கலர் பொடி - 1 சிட்டிகை [விரும்பினால்]


 

சிக்கனை சுத்தம் செய்து கத்தியால் ஆழமாக கோடு போட்டு வைக்கவும்.
எலுமிச்சை சாறுடன் தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் எல்லாம் கலந்து ஊற விடவும்.
3 மணி நேரம் ஊறிய பின் 220Cல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.
10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும்.
நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
சுவையான தந்தூரி சிக்கன் தயார். எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறவும்.


தயிர் விரும்பினால் சேர்க்கலாம். இல்லை எனில் மசாலாவில் சிறிது நீர் விட்டு குழைத்து கொள்ளலாம். கலர் அவசியமில்லை. மிளகாய் தூளே நல்ல கலர் தரும். விரும்பினால் பார்ட்டி நேரங்களில் மட்டும் கலர் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்