பால்கனியில் புறாக்கள் அசுத்தம் செய்வதை தடுக்க

எங்கள் வீடு அப்பார்ட்மெண்ட் இல் உள்ளது. அங்கு புறாக்கள் கூட்டம் அதிகமா உள்ளது. அது பால்கனியில் அடிக்கடி அசுத்தம் செய்து விடுகிறது. இதை தடுக்கவே முடியாதா?

அரிசி போட்டு அது சாப்பிடும் அழகை ரசியுங்கபா.
நமக்கு நல்லா பொழுது போகும்.

அட பாவமே!! பால்கனியை சுத்தம் செய்யவே நேரம் பத்தலை....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

புறாவொட கொர் கொர் சப்தம்.,,அது பறக்கர அழகு,,ஒண்ணை ஒண்ணு மூக்கால நோண்டுறது,,இதையெல்லாம் ரசிப்பீங்களா?
அதை விட்டுட்டு இப்படி கேட்டா

பக்கத்தில இருக்கவங்கல்லாம் அரிசி போடுவாங்க போல அதான் அங்கயே தங்குது..இது புரிஞ்சுக்காம நிறைய பேர் பறவையை ஊட்டி வளர்க்கிறேன்னு மனுஷனை தங்க விடாம பண்ணிடுவாங்க..நல்லாவே அச்னுபவிச்சிருக்கேன் இந்த தொல்லையை..நிகிலா அது அழகை சில நாள் தான் ரசிக்க முடியும் அதுக்கு பின் காணும் அசிங்கத்தால் ஜன்னலை கூட திறக்க சஹிக்காது.மட்டுமில்ல வீட்டுக்குள் ஒரு வித பூச்சி அதில் இருந்து வர தொடங்கும்.பிறகு பெஸ்ட் கன்ட்ரோள் பண்ண தான் வேண்டும்...திறந்த வெளியில் எல்லாம் ஓ கே ஆனால் ஒரு ஃப்லாட்டில் எல்லாம் வசிக்கிறப்போ அதுக்கு சாப்பாடு போட்டு வளர்த்துவது நிச்சயம் எல்லோருக்கும் தொந்தரவு தான்..தினமும் ஜன்னலை திறந்து வைய்யுங்க..ஜன்னலை சுவற்றையெல்லாம் ப்ரஷ் போட்டு கழுகுங்க.புறா உக்காராமல் தடுக்க ஒரு வலை உள்ளது அது போடலாம் அல்லது பெஸ்ட் கன்ட்ரோள் பண்ணுறவ்ங்ககிட்ட கேட்டா இன்னொரு கம்பி போன்ற ஒரு விஷயம் இருக்கு அதை வச்சு தருவாங்க..அதை பாத்தா ஜன்னலை திறந்து துறத்தி விடுங்க.ஜன்னல் கிட்ட எங்கயாவது சின்ன சின்ன புறாவின் கலரிலான கவர் ஒண்ணு ரெண்டு கட்டி விடுங்க..வில்லன் உக்காந்திருக்கான்னு பயப்படலாம்

தளிகா
நானும் பாரதியின் குயில் பாட்டை நெனைச்சி சொன்னேன்.
ஆனா புறாவால ரொம்ப கஷ்டப்பட்டிரிப்பீங்க போல
அப்ப சரி விரட்டி விடுங்க
இறந்த காக்காவை வைத்தால் காக்கா வராது.
அது மாதிரி கூட ட்ரை பண்ணலாம்.

மிக்க நன்றி தளிகா, நிகிலா. அனுபபூர்வமா அந்த தொல்லையை அறிஞ்சு சொன்னதுக்கு... உங்கள் குறிப்புக்களை முயற்சிக்கிறேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

புறாக்கள் மற்றப் பறவைகள் போல இல்லை. அழகை ரசிக்கிறதா நினைச்சு சாப்பாடு போட மட்டும் வேணாம். இப்போ இருக்கிற பிரச்சினையே போதும் இல்லையா? மழைகாலம் வந்தால் வாடை சகிக்காது. ;( துரத்த வழி சொல்லத் தெரியாது. தளி சொன்னதை ட்ரை பண்ணுங்க. கூடு கட்டுவது போல இடம் இருந்தால் (இவங்களுக்கு சின்னதா ஒரு இடைவெளி கூட போதும்.) கவனிச்சு ஆரம்பத்திலேயே அடைச்சு விட்டுருங்க. எங்கயாவது நாலு குச்சி சுவரில் / கூரையில் சேர்த்து வைத்திருப்பாங்க. முட்டை இடுமுன்பே பிரித்து விட்டுருங்க. பிறகு அந்த இடத்திற்குப் போக முடியாதபடி அடைத்து வைக்கலாம்.

wind chime / CD கட்டித் தொங்கவிட்டுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

அச்சச்சோ எல்லோரும் சேர்ந்து வெரட்டுரீங்களே?

நாங்க பாவம் எங்கே போவோம்?
இப்படிக்கு
புறா (சும்மா,சும்மா)

நன்றி இமா. நாங்க விரட்டி விட்டா என்ன ? நிகிலா வீட்டுக்கு வந்துரும். நீங்க சாப்பாடு போட்டு பாத்துப்பிங்களா பா !!!!!!!!!!! ஹா ஹா ஹா .............

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்