WEANING (SOLID FOODS)

வணக்கம்,

என் குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகிறது. அவளுக்கு எப்பொழுதிலிருந்து WEANING ( பிஸ்கட், செர்லாக் போன்றவை) ஆரம்பிக்கிறது ?

குறைந்தது ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதும் தண்ணீர் கூட தர தேவை இல்லைன்னு டாக்டர்ஸ் சொல்றாக. இருந்தாலும் எங்க வீட்டு பெரியவங்க சொல்படி நான் இரண்டு மாதம் முடிந்ததுமே மாரி (marie) பிஸ்கட் வெதுவெதுப்பான நீரில் குழைத்து குடுத்தேன், மில்க் பிஸ்கட் ரொம்ப இனிப்பா இருக்கும் ஆதாலால் நான் மாரி (marie) தான் குடுத்தேன். முதல் ஒரு பிஸ்கட் வீதம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிஸ்கட் கூட்டிக்கொண்டே சென்றேன் ஆனால் மேக்சிமம் 4 பிஸ்கட்டுக்கு மேல் சென்றதில்லை. பிஸ்கட்ஸ் ஒரு நாளைக்கு ஒரு முறை போதுமானது. முக்கியமாக காலை 10 மனியலவிலோ அல்லது மாலை 4 மனியலவிலோ குடுத்தால் நன்றாக செரிக்கும். முதலில் ஒரு பிஸ்கட் குடுத்து பாருங்கள், உங்கள் குழந்தைக்கு வயிறு ஒத்துபோச்சுனால் தொடருங்கள். சில குழந்தைகளுக்கு லூஸ் மோசன் போகும். பிஸ்கட் ஊட்டும்போதும் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் குடுங்க.

செரலாக் நான்கு மாதங்கள் முடிந்த பின் செரலாக் ஆரம்பிக்கலாம், முதலில் ரைஸ் ப்ளேவர் தான் குடுக்கணும். இதுவும் முதலில் காலை நேரத்தில் ட்ரை பண்ணுங்க. செட் அகிடுச்சுனால் அப்பறம் மாலையும் குடுக்கலாம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

5 மாதம் முடிந்த உடன் கொடுக்கவும். நானும் அதை தான் செய்தேன். But
நான் Milk Bikis கொடுத்தேன். இன்னும் Two months wait பண்ணலாம். அவசரம் வேண்டாம்

குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்:
1. குழந்தையின் தலை முழுவதுமாக நின்றுவிட்டதா?
2. தனியாகவோ அல்லது எதாவது ஆதரவுடனோ (with or without support ) உக்காருகிறதா?
3. நாம் குழந்தையுடன் பேசும்பொழுதும் கொஞ்சும்போழுதும் தனக்கு ஏதோ கொடுக்க போறாங்க என்று நினைத்து வாயை திறந்து திறந்து பார்க்கும்
இதெல்லாம் நடக்க 5 மாதமாவது ஆகும், அதனால் அதுவரையில் தாய்பால் மட்டுமே கொடுப்பது நல்லது
தாய்பால் இல்லாத தாய்மார்கள் பவுடர் பால் குறைந்தது 4 மாதமாவது கொடுக்கணும், தாய்பால் குறைந்து விட்டது என்று எண்ணும் தாய்மார்கள் பூண்டு, வெந்தயம் போன்ற தாய்பால் சுரக்கும் உணவு வகைகளை சாப்பிட்டு பால் சுரப்பை அதிகப்படுத்த வேண்டும், 5 மாதம் ஆகும்போது குழந்தைக்கு பால் போதவில்லை என்று நமக்கு உறுதியாக தெர்யும் பட்சத்தில் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம், மேலும் ஒவொரு மாதமும் குழந்தையும் உயரமும் எடையும் கண்டிப்பாக உயர வேண்டும் அப்படி உயரவில்லை என்றால் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம், 5 ஆவது மாதம் தான் இந்த பிரச்னை உருவாகும், இதெல்லாம் என் பையனுக்கு நேற்று திட உணவு கொடுக்கவா என்று மருத்துவரிடம் கேட்டப்போது அவர் சொன்னது, நான் மேலே கூறிய அனைத்தும் என் குழந்தை செய்வான், ஆனாலும் தாய்ப்பால் போதுமானதாக உள்ளது அதனால் திட உணவு இப்பொழுது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்., அதனால் நீங்கள் இன்னும் 2 மாதங்கள் கழித்து கொடுங்கள், அப்பவும் உங்கள் மருத்துவரை அணுகி விட்டு கொடுக்க ஆரம்பியுங்கள்,...,

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்