நெத்திலி மீன் குழம்பு - 1

தேதி: June 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

1. நெத்திலி மீன் - 2 டீ கப்
2. சின்ன வெங்காயம் - 10 (அ) பெரிய வெங்காயம் - 1/2
3. தக்காளி - 1
4. கறிவேப்பிலை - 1 கொத்து
5. சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. பூண்டு - 2 பல்
8. தேங்காய் பால் - 3/4 கப்
9. உப்பு, புளி - 1 சிறு எலுமிச்சை அளவு

தாளிக்க:

10. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

வதக்கி அரைக்க:

13. பெரிய வெங்காயம் - 1
14. தக்காளி - 1
15. கறிவேப்பிலை - 1 கொத்து
16. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி


 

மீன் சுத்தம் செய்து வைக்கவும். 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இவற்றை மிக்ஸியில் நன்றக அரைக்கவும்.
புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்தது கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.
இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள் வகை சேர்த்து பிரட்டி அரைத்த விழுது, புளி கரைசல், மற்றும் தேவைக்கு சிறிது நீர் விட்டு ஒரு கொதி விடவும்.
மசால் வாசம் குறைந்ததும் மீனை சேர்த்து கலந்து மூடி வேக விடவும்.
மீன் 3/4 பதம் வெந்ததும் தேங்காய பால் சேர்த்து நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது எடுக்கவும்.
சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.


சாம்பார் பொடிக்கு பதிலாக மிளகாய் தூள், மல்லி தூள் கலவை பயன்படுத்தலாம். 1 தேக்கரண்டி மிளகாய் தூளுக்கு, 2 தேக்கரண்டி மல்லி தூள் என்ற அளவில் சேர்க்கவும். தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்