ஃப்ரூட் டிப்

தேதி: June 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

க்ரீம் சீஸ் - 2 oz

மார்ஷ்மெல்லோ க்ரீம் - 3 மேசைக்கரண்டி

ஆரஞ்சு ஜூஸ் - 2 தேக்கரண்டி

பிங்க் ஃபுட் கலர் - சிறிது (விருப்பப்பட்டால்)


 

க்ரீம் சீஸை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.

இதனுடன், மார்ஷ்மெல்லோ க்ரீம் + ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு அடித்து எல்லாம் ஒன்றாக கலந்து வந்ததும் செர்விங் பவுலில் வைத்து, பழங்களுடன் பரிமாறவும்.

விருப்பப் பட்டால், ஃபுட் கலர் சிறிது சேர்த்து கடைசியாக ஒரு முறை கலந்துவிட்டு பரிமாறலாம்.

குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தமான யம்மியான டிப் இது. பார்ட்டிகளில் கட் ஃப்ரூட்ஸ்களுடன் செர்வ் செய்ய ரொம்ப பொருத்தமா இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் குறிப்பு. படமும் அழகா இருக்கு சுஸ்ரீ.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா!

மகளிடம் கட்டாயம் சொல்கிறேன். படம், அவள் எடுத்தது! :)

அன்புடன்
சுஸ்ரீ