காளான் வெள்ளைக் குருமா

தேதி: June 23, 2012

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பட்டன் காளான் – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
நறுக்கிய மல்லி புதினா – சிறிது
பச்சை மிளகாய் – 3
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு.

அரைக்க:
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு – 4
தயிர் – 1 மேஜைக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
சோம்பு – அரை தேக்கரண்டி


 

காளான் கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். வெங்காயம் நறுக்கி வைக்கவும்,பச்சை மிளகாய் கீறிக் கொள்ளவும்.அரைக்க கொடுத்தவற்றை அரைத்து ரெடி செய்யவும்.

கடாயில் நெய் ,எண்ணெய் விட்டு சூடானவுடன்,நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.காளான் சேர்க்கவும், நன்கு வதங்க விட்டு வேக விடவும்.காளானில் ஊறும் தண்ணீரிலே வேகட்டும்.மிளகாய் கீறி போடவும். மல்லி தூள் சீரகத்தூள் சேர்க்கவும்.அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். கொதிவரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான மஷ்ரூம் வெள்ளைக் குருமா ரெடி.


பரோட்டா,சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

nice

ஆசியா அக்கா நலமா உங்க காளான் குருமா ஸூபர்ரா இருந்தது நன்றி