Excercise பற்றி விளக்கம் தாங்களேன்.

நான் 6 மாத கர்ப்பம். Normal delivery ஆக pelvic floor exercise செய்யாலாம் என்று அறுசுவையில் படிதத்தேன். இதை பற்றி தெரிந்தவர்கள் விளக்குங்களேன் pls.
வேறு என்ன exercise செய்ய வேண்டும்.எப்படி முறையாக செய்வது என்றும் சொல்லுங்களேன்.உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

இந்த எக்சர்சைஸ் எதுவும் நீங்க கேட்டதை வைத்து செய்வதில்லை, பார்த்து செய்வதும் இல்லை. முறையா உங்க மருத்துவர் சொல்லி குடுக்கனும். கூடவே 2 நாள் அல்லது 1 வாரம் வரை அங்க வந்து செய்ய சொல்வாங்க, நீங்க சரியா பண்றீங்கன்னு உறுதியா தெரிஞ்ச பிறகு தான் வீட்டில் தனியா செய்ய விடுவாங்க. இது நாமா செய்வது ரிஸ்க். கூடவே இந்த எக்சர்ஸைஸ் எல்லாரும் செய்ய கூடாது, உங்க உடல் நலம் பார்த்து அதுகு ஏற்றவற்றை மட்டுமே செய்யனும், அதை உங்க மருத்துவர் தான் முடிவு பண்ணனும்.

மற்ற தோழிகள் கருத்தையும் கேட்டுக்கங்க... நான் எனக்கு தெரிஞ்சு என் அனுபவத்தை சொல்லிருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா மேடம். நான் டாக்டரிடம் கேட்டதற்குஅவங்க interest காட்டவே இல்லை.அதனால் தான் கேட்டேன்.

No joy can equal the joy of Helping others

god bless u

மேலும் சில பதிவுகள்