நெத்திலி மீன் குழம்பு - 2

தேதி: June 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. நெத்திலி மீன் - 2 டீ கப்
2. புளி - 1 எலுமிச்சை அளவு
3. தேங்காய் பால் - 1/2 கப்
4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 1
9. கடுகு - 1/4 தேக்கரண்டி
10. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
11. சின்ன வெங்காயம் - 10
12. உப்பு
13. கறிவேப்பிலை


 

மீனுடன் தூள் வகை, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போனதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மீனில் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் எடுக்கவும். சுலபமான சுவையான மீன் குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

romba nandra irundhadhu

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா