அம்ரிட்சாரி குல்சா

தேதி: June 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

அம்ரித்சாரி குல்சா செய்ய :
மைதா - 3 கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
தயிர் - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

முதலில் மாவுடன் உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்த்து கலக்கவும். இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
பிறகு எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு அதிகம் கொழகொழப்பாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்க கூடாது. அது தான் பதம். ஈர துணி போட்டு மூடி வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து மாவை எடுத்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை எடுத்து மொத்தமாக மாவு தேய்த்து தேய்க்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் பேனில் போட்டு மூடி வைத்து வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுக்கவும். கடைசியாக அப்படியே நெருப்பில் போட்டு எடுக்கவும். சுவையான அம்ரிட்சாரி குல்சா தயார்.

சுவையான குல்சா செய்ய ஒரு உருண்டை மாவை எடுத்து கையாலே தேய்த்து கொடுக்க வேண்டும். அப்படியே சீராகவும் அதிகம் அழுத்தம் கொடுக்காமலும் தட்டி தட்டி வட்டமாக செய்தால் மிருதுவாக வரும். இதை க்ரில்லில் போட்டெடுக்கலாம். வட்டமாக தட்டிய பிறகு இருபுறமும் எண்ணெய் தேய்த்து வைக்கவும். க்ரில்லை ஹை டெம்பரேச்சரில் சூடு செய்து போட்டெடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... குல்சா... என்னை விட எங்க அப்பாக்கு இது ரொம்ப ஃபேவரட். ஊருக்கு போனா அவருக்கு குல்சா செய்து குடுக்கறேன் உங்க முறையில். ரொம்ப நல்லா இருக்குங்க. கலக்குங்க. படமும் நல்லா வந்திருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேர் சாப்பிடத் தூண்டுதே! ;) ம்... எதோட சாப்பிட்டா நல்லாருக்கும் லாவி?
பேர்... காரணம் ஏதாவது உண்டா?

‍- இமா க்றிஸ்

அன்பு லாவண்யா,

அழகா செய்து காண்பித்திருக்கீங்க. பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அழகா இருக்கு லாவி, பரோட்டாக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ரெண்டுமே போடணுமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி.

அப்போ ஊருக்கு போ போறீங்க....அப்படி தானே? சரி சரி.....மேசேஜ் நோடட் ;) செய்து கொடுத்து அப்பா என்ன சொன்னாங்கன்னு அப்போ வந்து சொலுங்க. நன்றி வனி.

எந்த சோலே அல்லது சென்னா மசாலவுடனும் நல்ல இருக்கும் இமா. இல்லைனா பாலக் கிரேவி, மாட்டார் கிரேவி இப்படி கிரேவியுடனும் நல்லாவே இருக்கும். குல்ச்சா என்றால் மாவை பேகிங் ஏஜன்ட் சேர்த்து பேக் செய்வது என்று அர்த்தமாம். இது இந்தியாவில் உள்ள அம்ரிட்சர் என்னும் இடத்தில் ரொம்பவே பிரபலம். இது பஞ்சாபிகளின் முக்கியமான உணவும் கூட. அதனால் தான் இந்த பெயர். எப்படியோ இமாவை சாப்பிட தூண்டியாச்சு. நன்றி இமா.

பாராட்டுக்கு நன்றி சீதாலக்ஷ்மி.

நன்றி சுகி. நீங்க கேட்டது பரோட்டாவா இல்லை பராத்தாவா? பரோட்டா லேயர் லேயராக ப்ளேக்கியாக இருக்கும். பராத்தா கோதுமை மாவினால் உள்ளே ஸ்டஃபிங் வைத்தும் வைக்காமலும் செய்வது. இது லேயர் லேயராக இருக்காது. அங்கங்கே முட்டை முட்டையாக உப்பி இருக்கும்.
பேகிங் சோடா போடுவதால் தான் சிறு சிறு முட்டை போல ஆங்காங்கே உப்பி வரும். பேகிங் பவுடர் போடுவதால் மாவு மொத்தமாக உப்பி வரும். இதற்க்கு ரெண்டும் அவசியம். அது தான் இதன் ஸ்பெஷல்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹைய்யா லாவி... ப்ளேட்டை அந்தபக்கம் திருப்பினா பஞ்சாபி சோலே கறி, இந்த பக்கம் திருப்பினா அம்ரிட்சாரி குல்சா! :) ஐ லைக் இட்!

அம்ரிட்சாரி குல்சா அழகா செய்திருக்கிங்க. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் லாவி!

அன்புடன்
சுஸ்ரீ

லாவி குல்சா சூப்பரா இருக்கு அப்படியே எனக்கு பார்சல் பன்னிடுங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா,
குல்ச்சா செய்தாச்சு..
ரொம்ப நன்றாக இருந்தது..

என்றும் அன்புடன்,
கவிதா