தக்காளி பருப்பு பச்சடி

வழங்கியவர் : CHITHRA DURAI
தேதி : Sat, 19/08/2006 - 13:53
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு
- தக்காளி – கால் கிலோ
- வெங்காயம் – இரண்டு
- பச்சை மிளகாய் – ஆறு
- துவரம் பருப்பு – நூறு கிராம்
- எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - இரண்டு
- சோம்பு – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை – இரண்டு கொத்து
- மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
- உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
- அரைக்க:
- சோம்பு – அரை டீஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
- பூண்டு – ஒரு பல்
- பருப்பை இருநூறு மில்லி தண்ணீரில் மலர வேக வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.
- தக்காளிகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பிறகு வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு இறக்கி மீதமுள்ள எண்ணெயில் கிள்ளிய வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, மல்லி இலை தூவி மூடவும்.
Note:
இந்தப் பச்சடி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் மிக நன்றாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
55 sec முன்பு
3 நிமிடங்கள் 32 sec முன்பு
6 நிமிடங்கள் 23 sec முன்பு
6 நிமிடங்கள் 51 sec முன்பு
6 நிமிடங்கள் 42 sec முன்பு
7 நிமிடங்கள் 24 sec முன்பு
11 நிமிடங்கள் 5 sec முன்பு
14 நிமிடங்கள் 37 sec முன்பு
15 நிமிடங்கள் 15 sec முன்பு
15 நிமிடங்கள் 23 sec முன்பு