பீட்ரூட் கறி

தேதி: June 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

பீட்ரூட் - 2
கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - 3/4 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1 சிட்டிகை
பூண்டு - 2 பல்

உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


 

முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலை சீவிவிட்டு வைக்கவும். பிறகு அதனை, முழுதாக ஒரு குக்கர் பாத்திரத்தில் வைத்து, குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். (காய் வேகத் தேவையான அளவு மிக சிறிதளவு தண்ணீரே போதுமானது. இந்த தண்ணீரையும் கூட ரசம் செய்யும் போது பயன்படுத்தி கொள்ளலாம். சத்து வீணாகாமல் சேரும்.) ப்ரஷர் அடங்கியதும், பீட்ரூட்டை எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.
ஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க லிஸ்ட்டில் உள்ளவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.
எல்லாமும் சேர்ந்து வறுப்பட்டதும், நறுக்கி வைத்த பீட்ரூட்டை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். அதில் வரும் ஸ்டீமிலேயே காய் வெந்துவிடும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் தெளித்து விடவும்.
ஏற்கனவே காய் வெந்து இருப்பதால் அதிக நேரம் இருக்க தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே மூடியைத் திறந்து கடலை மாவு, தனியா கலவையை போட்டு, கலந்து விடவும்.
மாவு காயில் நன்கு படுமாறு பிரட்டிவிட்டு, பிறகு ஒரு அரை கப் தண்ணீர் சேர்த்து, மீண்டும் மூடி போட்டு காயை நன்கு கலந்து வேக விடவும்.
ஒரு 5 அல்லது 6 நிமிடங்களுக்கு பிறகு கடலைமாவு, தனியாத்தூள் வாசம் அடங்கியதும், அடுப்பை அணைத்து எடுத்து விடவும்.
சுவையான பீட்ரூட் கறி தயார்! இது வெறும் சாதம், ரசம் சாதம் மற்றும் சப்பாத்தி உடன் பரிமாறி சாப்பிட அருமையாக இருக்கும்.

காரம் மேலும் விரும்புபவர்கள் பச்சை மிளகாயின் அளவை சேர்த்து போட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முகப்பில் படம் பார்த்ததும் நீங்கன்னு கண்டு பிடிச்சுட்டனே... ;) கலர்ஃபுல் டேஸ்டி குறிப்பு. ஐ லைக் இட். அவசியம் செய்துடுறேன். கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ நானும் நீங்கதான்னு கண்டுபிடிச்சுட்டேனே :))
கலர்ஃபுல் கறி அப்படியே எடுத்து சாப்பிடதூண்டுது கடலை மாவு சேர்ப்பது புதுமையா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்க்ள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு சுஸ்ரீ,

கூல் புகைப்படங்கள், அழகான ப்ரசண்டேஷன். நல்லா இருக்கு.

கடலை மாவு சேர்த்திருப்பதால் மொறு மொறுப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

வாவ் ....சூப்பர் !!! படங்கள் கண்களுக்கு விருந்து .வாழ்த்துக்கள் !

சுஸ்ரீ,
பீட்ரூட் கடலை மாவு சேர்த்து புதுமையா இருக்கு..
செய்து விட்டு சொல்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

சுஸ்ரீ,

நான் பீட்ரூட்டில் எப்பவும் பொரியல் தான் செய்வேன், இதில் கறியா நிச்சயம் முயற்ச்சித்து பார்க்கிறேன்.

படங்கள் பளீச் & அழகு. அதும் அந்த கசைசி ப்ளேட் சும்மா கலர்புல்ல இருக்கு.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை நண்பர்களுக்கு நன்றி!

--
வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து தோழிக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!

ரொம்பவும் நேர நெருக்கடியில், அவசர வேலையாக இருப்ப‌தால், தற்சமயம் த‌‌னித்த‌னியா ந‌ன்றி சொல்ல இயலவில்லை... தவறாக நினைக்கவேண்டாம்.
மீண்டும் ஒரு நாள், நிதான‌மாக‌ வ‌ருகிறேன்! :)

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ இன்று பீட்ரூட் கறி செய்தேன். கடலை மாவு சேர்த்து செய்தது புதுமையாகவும் சுவையாகவும் இருந்தது. நன்றி

இதுவும் கடந்து போகும்

உங்க பீட்ரூட் கறி நேற்று நைட் செய்தேன் சப்பாத்திக்கு மிக நன்றாக இருந்தது. நல்ல ரெசிபி செய்து காட்டியதற்கு நன்றி.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.