மல்லி துவையல்

தேதி: June 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

கொத்தமல்லி விதை - 100 கிராம்
வரமிளகாய் - 3
உப்பு
புளி - தேவையான அளவு
வெல்லம் - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய், மல்லி இரண்டையும் வறுக்கவும்.
ஆறியதும் புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
சுடு சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும். பித்தத்திற்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சுலபமான சுவையான துவையல். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மஞ்சு மல்லிதுவையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் இப்படித்தான் செய்வேன் ஆனால் வெல்லம் சேர்த்ததில்லை வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு மஞ்சு,

மல்லி துவையல் வாசனை இங்கே வரைக்கும் வருது!

நல்லா இருக்கு செய்முறை, பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

தோசைக்குக்கூட தொட்டுக்கொள்ளலாம் போலிருக்கே !!சுவையான குறிப்பு .

மஞ்சு,
எளிமையான,ஆரோக்கியமான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கொத்தமல்லி விதை என்றால், தனியா தானே...

தனியா என்றால் இங்கு எளிதாக கிடைக்கும், செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Enakku remba piticha thuvayal enga ammavum ipatithan seivanga.pakkave remba azhaga irukku naan oru nalaiku senjutu Soren ungalukku.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வனி,சீதா மேம்,ஸ்வர்ணா,பிரேமா,விப்ஜி,கவிதா,மஹி அணைவருக்கும் நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு