2 மினிட்ஸ் கேக்

தேதி: June 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (13 votes)

 

ஸெல்ப் ரெய்சிங் மாவு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
வெஜிடபுள் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு காபி மஃக்கில் (mug ) மாவு, கோகோ பவுடர், சர்க்கரையை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பின் பால், எண்ணெய், முட்டையை சேர்க்கவும்.
அதை நன்றாக கட்டி இல்லாமல் அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
மைக்ரோ வேவ் அவனில் 2 நிமிடம் வைக்கவும்.
சாக்கோ ஸ்பான்ஜ் கேக் ரெடி.
வெனிலா கேக் செய்ய கோகோ பவுடரை மட்டும் தவிர்த்து நான்கு தேக்கரண்டி மாவு சேர்த்து மேலே கூறிய மற்ற பொருட்களான பால், 3 தேக்கரண்டி சர்க்கரை, எண்ணெய், முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
அதை நன்கு கட்டி இல்லாமல் அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
அதே போல மைக்ரோ வேவ் அவனில் வைத்ததும், 2 நிமிடங்களில் மஃக்கின் பாதி உயரத்திற்கு மேல் நன்கு பொங்கி வரும். அவனை அணைத்ததும் உப்பியது இறங்கிவிடும்.
2 மினிட்ஸ் மஃக் கேக் ரெடி.
நன்கு ஆறியதும், மஃக்கை கவிழ்த்தால் ஒட்டாமல் வெளியே வந்துவிடும். மிருதுவான ஸ்பான்ஜ் கேக் நினைத்த உடன் செய்துவிடலாம்.
துண்டுகளாக போட்டும் சாப்பிடலாம். அப்படியே மஃகில் ஸ்பூன் கொண்டு சாப்பிடலாம். மேலே பவுடர் சுகர் கொண்டு அலங்கரிக்கலாம். விப் கிரீம்களை மஃகின் மேல் போட்டும் பரிமாறலாம்.

ஸெல்ப் ரெயிசிங் மாவு செய்ய 150 கிராம் மைதாவில், ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடரையும், ஒரு கிள்ளு உப்பையும் போட்டு ஷிப்ட்டர் (Shifter ) கொண்டு சலிக்கவும். ஷிப்ட்டர் இல்லாதவர்கள் சாதாரண சல்லடையிலேயே 3, 4 முறை சலித்து எடுக்கவும். மஃக்கின் பாதி வரை மட்டுமே கலவையை ஊற்ற வேண்டும். சாதாரண தேக்கரண்டி கொண்டு அளவிடவும். அதே தேக்கரண்டி கொண்டே மற்ற பொருட்களையும் அளக்கவும். சாதாரண கேக் போல அல்லாமல் மிகவும் மிருதுவாக ஸ்பான்ஜ் போல இருக்கும். தேவை எனில் சாக்கோ சிப், சாக்லேட் ஜாம் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யாக்கா ஈசி அன்ட் சூப்பர் கேக். பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள். நான் ட்ரை பண்ற மாதிரி ஒரு கேக் ரெசிபி கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் .

looks very yum. Can you tell me the substitute for egg.

mythuroy

நானும் இதை போல் தான் சேய்வேன். மிகவும் நான்றாக இருக்கும். என் குழந்தைகு ரொம்ப பிடிக்கும்.

இங்கே கோடை விடுமுறை இன்றுதான் ஆரம்பம். குழந்தைகளுக்கு செய்ய இன்ஸ்டன் கேக் தயார். சரியான நேரத்தில் சரியான குறிப்பு. நன்றிகள் பல.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரம்யா,
அருமையான குறிப்பு..
இது போலே நானும் செய்வதுண்டு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா,

இது என்ன 2 மினிட்ஸ் மேகி மாதிரி 2 மினிட்ஸ் கேக்கா... சூப்பருங்க...

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு ரம்யா,

அவன் இல்லாம, சுலபமா கேக் செய்ய சொல்லித் தந்திருக்கீங்க. மிகவும் நன்றி.

அவசியம் செய்து பார்க்கிறேன், விருப்பப் பட்டியலிலும் சேர்த்துட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சுப்பர்ப் ரம்ஸ். :)

‍- இமா க்றிஸ்

ரம்ஸ் நொடியில் ரெடி கேக் சூப்பர்........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வழக்கமான அவன் கேக்கா இல்லாம மைக்ரோவேவ் கேக்... சூப்பர். சுலபமான மெதட். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

we r vegetarian. wats the substitute for egg ? plzzzzzzzzz tell.. thank u for ur receipe....

god is love

Ithanai normal oven-il seiyelama?

We cannot find ourselves if we are always looking for someone else.

ரம்யா அருமையான எவ்ளோ ஈசியான குறிப்பு

ரொம்ப நன்றி ரம்யா, ஈசியான கேக் குறிப்பு. செய்து பாத்தாச்சு, நல்லா வந்துருக்கு.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நான் உங்கள் குறிப்பினால் முதல் முறை கேக் செய்தேன்.
கொஞ்சம் கசப்பாக இருந்ததுங்க. நீங்கள் சொன்ன அதே அளவு தான் :( ஏற்கனவே இரண்டு முறை முயற்சி பண்ணியாச்சு. என்ன தவறு என்று புரியவில்லை