வாழைக்காய் புளிக்குழம்பு

தேதி: August 19, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - இரண்டு
சின்ன வெங்காயம் - நூறு கிராம்
தக்காளி - இரண்டு
பெரிய வெங்காயம் – இரண்டு
மிளகாய் பொடி – இரண்டு டீஸ்பூன்
மல்லிப்பொடி – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்
புளி – ஒரு நடுத்தர எலுமிச்சையளவு
உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
பூண்டு – இரண்டு பல்


 

புளியை நானூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். வாழைக்காயில் அடியையும் நுனியையும் லேசாக நறுக்கி விட்டு நீளத்தில் நான்காக பிளந்து அரை அங்குல கனமான துண்டுகளாக குறுக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். (தோல் நீக்க வேண்டாம்)
சின்ன வெங்காயத்தை தோலுரித்து குறுக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி விழுதாக அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து மஞ்சள் பொடி,மல்லிப்பொடி, மிளகாய்பொடி சேர்த்து வதக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போனதும் உப்பு, அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டு மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு பூண்டு தட்டிப் போடவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்கள் recipe try செய்தேன்.நன்றாக இருந்தது.பகிர்ந்தமைக்கு நன்றி.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!