மால்வானி சிக்கன்

தேதி: June 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க 1 :
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லி தழை - சிறிதளவு
அரைக்க 2 :
சோம்பு - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - மிக சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
மல்லி தழை - சிறிதளவு
வெங்காயம் - பாதி
அரைக்க 3 :
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
தனியா - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
கசகசா - கால் தேக்கரண்டி
முந்திரி - 5
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
பிரிஞ்சி இலை, பெருங்காயம், பட்டை, கிராம்பு, எண்ணெய் - தாளிக்க
மல்லி இலை - அலங்கரிக்க


 

அரைக்க 1 லிஸ்டில் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து இந்த கலவை மற்றும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை மற்றும் தயிர் சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.
அரைக்க 2 என்று கொடுத்துள்ளதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
அரைக்க 3 என்று கொடுத்துள்ளதில் எல்லாவற்றையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும். பொரிந்ததும் பொடியாக அறிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இரண்டாவது மசாலாவை சேர்த்து வதக்கவும்.
இரண்டொரு நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே சிக்கனில் உப்பு இருக்கு) சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
இப்பொழுது ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
மசாலா சிக்கனில் நன்கு பரவியதும் அரைத்து வைத்துள்ள மூன்றாவது மசாலாவை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து மிதமான தீயில் முப்பது நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரையில் வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும். இது சுடு சாதம், சப்பாத்தி, மால்வானி பூரியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இந்த சிக்கனில் பொருட்கள் அதிகமாக இருப்பது மாதிரி தெரியும். ஆனால் செய்வது ரொம்பவே சுலபம். எல்லாவற்றையும் வதக்கி அரைத்து வைத்துக் கொண்டால் ரொம்பவே சீக்கிரம் முடிந்து விடும். சுவைத்து பார்த்தால் அடிக்கடி செய்ய தூண்டும் குறிப்பு இது. மால்வானி பூரியின் லிங்க் இதோ http://arusuvai.com/tamil/node/22974


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லவேள குறிப்பு கொடுத்தீங்க... இல்லைன்னா எக்கசக்கமா சாமான் இருக்கேன்னு முழிச்சுட்டிருந்தேன் அவ்வ்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அம்மாமாமாமாமாடி....ரொம்ப பெரிய லிஸ்ட் அஹ இருக்கே....
அரைக்கறக்கு பகுதி பகுதியா தந்து இருக்கீங்க. பொறுமை அதிகமோ அதிகம் லாவி... கண்டிப்பா செஞ்சு பாக்கறேன்னு பொய் சொல்ல மாட்டேன். யாரவது செஞ்சு தாங்க, நல்லா டேஸ்ட் பாக்கறேன். வாழ்த்துக்கள் லாவி

yellow ரோஸ் எப்படி வந்துச்சு?
பூரி லிங்க் தந்து இருக்கீங்களே,அது நம்ம ரேஞ்சுக்கு ஓகே,அதை கண்டிப்பா பண்ணி பாக்கறேன் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

லாவண்யா,
ரொம்ப புதுமையா இருக்கு..பொறுமையா இருக்கும் செய்து பார்க்கிறேன்..
///பாவங்க உங்க மிக்சி!!! (சும்மா :D)///

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

அமினா பல நாட்கள் பிறகு உங்களின் பதிவு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்ன பண்ண என்னக்கேல்லாம் குறைந்த பொருட்கள் வைத்து செய்ய தெரியவே மாட்டேன்குது :( முழிசிட்டே இருந்த எப்படி.....செய்துட்டு வந்து சொல்லுங்க சரியா? வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

சுகி நமக்கு லிஸ்ட் எல்லாம் பத்தி என்ன கவலை.....நாமெல்லாம் யாரு ஊரு விட்டு ஊரு போய் லஞ்ச் சாப்டுட்டு வரவங்க ;) அதையே தான் நானும் சொல்றேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. என்ன செஞ்சி தர மாட்டாங்களா என்ன? மஞ்சள் ரோஸ் எலுமிச்சையின் உபயம் :) நன்றி அட்லீஸ்ட் பூரியாவது செய்து பார்த்துட்டு சொல்லுங்க. இல்லைனா விட மாட்டேன்.

கவி, புதுமை எல்லாம் இல்லை.....நிறைய முறை வாடா இந்தியாவில் ருசித்த குறிப்பிது. சும்மாவே இருந்தா தாங்க மிக்சி பாவம் ;) நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மால்வானி சிக்கன், குறிப்பு பெயரும் புதுசா, அழகா இருக்கு, படமும் அழகா இருக்கு லாவி! ஏகப்பட்ட ஐய்ட்டம்ஸ் போட்டு சூப்பரா பண்ணியிருக்கிங்க! ப்ரசண்டேஷன் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு!, ஐ லைக் இட்! :)

அன்புடன்
சுஸ்ரீ

இரண்டு முறை பதிவாயிடுச்சி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவி அடேங்கப்பா எவ்ளோ பெரிய லிஸ்ட் பாக்கவே கண்ணைகட்டுதே!!!

வாழ்த்துக்கள்.....கடைசி படம் செம அழகு எலுமிச்சை ரோஸ் சூப்பர் குறிப்பும் தான்...:))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எப்படி தான் இப்படி சிரமமெடுத்து செய்யறீங்களோ!!! நமக்கு ரொம்ப கஷ்டம். :) அவசியம் செய்துடுவோம் லாவி கொடுத்ததுக்காக. சூப்பரா இருக்கு கடைசி படம் எலுமிச்சை ரோஜாவோட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா