உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

காரட் வறுவல்

 


தேவையானப் பொருட்கள்

  • காரட் – அரை கிலோ
  • மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  • மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – ஒரு டீ ஸ்பூன்
  • எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – மூன்று கொத்து
  • வறுத்து பொடிக்க:
  • மல்லி விதை – அரை டீ ஸ்பூன்
  • சோம்பு – அரை டீ ஸ்பூன்

செய்முறை

  • கரட்டைக் கழுவி சுமார் அரை செ.மீ கணமுள்ள அரைவட்ட துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிரட்டி இருபது நிமிடங்கள் வைக்கவும்.
  • சோம்பு, மல்லி விதையை வறுத்து நைசாக பொடிக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, காரட்டைப் போட்டு அடிக்கடி கிளறி வதக்கவும்.
  • காரட் நன்கு வெந்ததும் மிளகாய்ப் பொடி போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் கறிவேப்பிலை, பொடித்து வைத்த பொடி சேர்த்து மேலும் மூன்று நிமிடம் வதக்கி இறக்கவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஆறு நபர்களுக்கு பதினைந்து நிமிடங்கள் இருபது நிமிடங்கள்
random food image


comments