www.arusuvai.com
காரட் வறுவல்
தேவையானப் பொருட்கள்
- காரட் – அரை கிலோ
- மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
- மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு – ஒரு டீ ஸ்பூன்
- எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை – மூன்று கொத்து
- வறுத்து பொடிக்க:
- மல்லி விதை – அரை டீ ஸ்பூன்
- சோம்பு – அரை டீ ஸ்பூன்
செய்முறை
- கரட்டைக் கழுவி சுமார் அரை செ.மீ கணமுள்ள அரைவட்ட துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிரட்டி இருபது நிமிடங்கள் வைக்கவும்.
- சோம்பு, மல்லி விதையை வறுத்து நைசாக பொடிக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, காரட்டைப் போட்டு அடிக்கடி கிளறி வதக்கவும்.
- காரட் நன்கு வெந்ததும் மிளகாய்ப் பொடி போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் கறிவேப்பிலை, பொடித்து வைத்த பொடி சேர்த்து மேலும் மூன்று நிமிடம் வதக்கி இறக்கவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
பதினைந்து நிமிடங்கள் |
இருபது நிமிடங்கள் |