சன்னா கிரேவி

தேதி: July 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (10 votes)

 

சன்னா - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி, பூண்டு - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு
முந்திரி - 5
பாதாம் - 5
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இதை வதக்கவும்.
பச்சை வாசம் போனதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
தக்காளி வதங்கி எண்ணெய் பிரியும் போது தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
இதில் வேக வைத்த சன்னா மற்றும் தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து தூள் வாசம் போனதும் ஊற வைத்த முந்திரி, பாதாமை அரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து வந்ததும் எடுக்கவும். சுவையான சன்னா கிரேவி தயார். இது நெய் சாதம், ரொட்டி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் சூப்பர் ஜோடி.

பாதாம் இல்லாமல் முந்திரி மட்டுமே அரைத்து சேர்த்தாலும் போதும். வெங்காயத்துடன் விரும்பினால் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாம். காரம் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி கொள்ளவும். கொடுத்திருக்கும் அளவு குறைவான காரமே.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா அக்கா,
நான் அனுகோபி என் அம்மாவும் இதே போல் தான் செய்வாங்க.ஆனால் முந்திரி பாதாம் சேக்காம வெங்காயம் தக்காளி வதக்கி பின் நீங்க செய்றது போல தான் .என்னக்கு ரொம்ப பிடிக்கும் .........

by,
AnuGopi,
Be happy and Make others happy........

சூப்பரான குறிப்பு அக்கா ...எனக்கு மிகவும் பிடித்தமான மசாலா,இன்று இரவே (உங்கள் முறைப்படி)செய்து விடுகிறேன் small request :நாண் ரெசிபியுடன் அனுப்பிய தக்காளி சேர்க்காமல் எலுமிச்சை சாறு சேர்த்த சன்னா மசாலா குறிப்பையும் எங்களுக்கு கற்றுத்தாருங்கள் அக்கா ...

ஹ்ம்ம் யம்மியானோ எனக்கும் கொஞ்சம் தாங்களேன் வனிதா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சன்னா மசாலா நல்லா இருக்கு. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சன்னா க்ரேவி. சூப்பரா இருக்கு வனிதாஅரச்சுவிட்டு பண்ணிருகின்க நள்ளா இருக்குன்னு நினைக்கிறேன் இந்த முறைபடி சமைசிட்டு சொல்றேன்.

இன்று உங்கள் சன்னா கிரேவி செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது . நன்றி

இதுவும் கடந்து போகும்

Vanitha akka... Nan vengayam, thakkali vadhakkithaan seivadhu vazhakkam. Unga muraiyil araithu try panren...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

அனு... மிக்க நன்றி. இந்த முறையிலும் செய்து பாருங்க :)

விப்ஜி... மிக்க நன்றி. அந்த சன்னா ரெசிபி... ஒரு நாள் செய்துட்டு படத்தோட கண்டிப்பா அனுப்பறேங்க. :)

கனி... மிக்க நன்றி. கொஞ்சம் என்ன எல்லாமே உங்களூக்கு தான். :)

மஞ்சு... மிக்க நன்றி :)

மகா... மிக்க நன்றி. நிச்சயம் நல்லா இருக்கும், தைரியமா செய்யுங்க. :)

கவிதா... செய்துட்டீங்களா??? ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க. நன்றி. :)

நித்யா... மிக்க நன்றி. அரைச்சு செய்தா சுவை மாறுபடும். கூடவே கிரேவி நல்லா ஸ்மூத்தா வரும். ட்ரை பண்ணி பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சன்னா கிரேவி ரிச் & டேஸ்ட்டியா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி சன்னா க்ரேவி சுப்பர்........... (நான் செய்யல,.... உங்க குறிப்ப வச்சு அம்மா செஞ்சு தந்தாங்க நல்லா சப்பிட்டது மட்டும் தான் நான்............ :>)

The most difficult phase of life is not when no one understands u;
It is when u don't understand ur self.

சுவர்ணா... மிக்க நன்றி :)

ரேவதி... செய்து சாப்பிட்டாச்சா?? மிக்க நன்றி :) அம்மாக்கு ஸ்பெஷல் தேன்க்ஸ் சொல்லுங்க, செய்து கொடுத்ததுக்காக.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா,
நேற்று சன்னா கிரேவி செஞ்சேன். வாசனையோடு சூப்பரா வந்தது :) இரவு சப்பாத்தியுடன், காலையில் பூரியுடனும் சாப்பிட்டோம் :)
புதுசா எது முயர்சினாலும் பயம் எனக்கு. ஆனா சன்னா கிரேவி ஒரு வாசமோட ரொம்ப நல்லா வந்தது ரொம்ப மகிழ்ச்சி :) மிக்க நன்றி அக்கா.
அன்புடன்,
சந்திரா

அட... செய்துட்டீங்களா??? மிக்க மகிழ்ச்சி சந்திரா. பிடிச்சிருந்தா சரி :)

//ஆனா சன்னா கிரேவி ஒரு வாசமோட ரொம்ப நல்லா வந்தது// - அதென்ன ஆனா?? அப்படின்னா வேறு எது சொதப்புச்சு?? ;) வனி சமையல் ஏதும் சரியா வரலயா புதுசா ட்ரை பண்ணி?? இருந்தா சொல்லுங்க, சரி பண்ணிடலாம் :)

சும்மா தான் கேட்டேன்... தப்பா நினைச்சுக்காதீங்க. பயப்படாம முயற்சி செய்யுங்க... அப்பறம் எப்படி புதுசா கத்துக்குறது?? சரி தானே? மிக்க நன்றி சந்திரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா,
இங்க இந்த ஆனா refers to என் பயம் :) உங்க சமையல் இல்லை அக்கா :)

//வனி சமையல் ஏதும் சரியா வரலயா புதுசா ட்ரை பண்ணி?? இருந்தா சொல்லுங்க, சரி பண்ணிடலாம் :) // ஆஹா! எனக்கு சப்பொர்டும் தருவது மனசுக்கு நிறைவா இருக்கு :) அக்கா, உங்க சமையல் சரியா வராமல் போகாது! ஏதும் சொதப்பினாலும் நிச்சயம் என் தவறாக தான் இருக்கும்!

//பயப்படாம முயற்சி செய்யுங்க... அப்பறம் எப்படி புதுசா கத்துக்குறது?? சரி தானே?//
ரொம்ப சரி அக்கா. நிச்சயம் முயற்சிக்கிறேன்!

மிகவும் நன்றி அக்கா.
அன்புடன்,
சந்திரா

இவ்வளவு நம்பிக்கையா?? :) நான் அதை காப்பாத்திக்கிட்டா சந்தோஷம் தான். நன்றி சந்திரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நாளா செய்யனும் நினைச்சு, நேற்று செய்து பார்த்தாச்சு....

கொத்தமல்லியை அரைத்து இதுவரை செய்ததில்லை... ரொம்ப நல்ல இருந்தது, புது சுவையுடனும் மணத்துடனும்!!!!

வாழ்த்துக்கள்!!!!!

மிக்க நன்றி. எத்தனை நாளானாலும் செய்து சொன்னீங்களே... அது தான் மகிழ்ச்சி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா