500 குறிப்பு தந்த வனியை வாழ்த்தலாம் வாங்க....

அறுசுவை மெனு ராணி 500 குறிப்பு தந்து அசத்தி இருக்காங்க.
ஒரு ஒரு குறிப்பும் ஏகப்பட்ட வித்தியாசம், பல நாடுகளின் உணவு வகைகள், சுவை அதிகம் கிடைக்க குட்டி குட்டி குறிப்புகள்ன்னு கலக்கறீங்க.

இன்னும் பல குறிப்பு தந்து 1000 சிகரத்தை சீக்கரம் தொட மனதார வாழ்த்துக்கள் வனி.....

சூப்பர்... வாழ்த்துக்கள் ஆல் - இன் - ஆல் மேடம் :)

சீக்கிரமே 1000 தொட வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அக்கா,
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!! . கலக்குங்க அக்கா :)
குறிப்பு எல்லாமே நல்ல விளக்கமுடன் + நிறைய டிப்ஸோட புரியரபடியும் தரிங்க :) அதுவும் உங்களோட ஸ்பெஷல் :) இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்!
உங்களோட கமிட்மெண்ட் மற்றும் ஈடுபாடு எனக்கு இன்ஸ்பிரேஷன்!
உங்களோட நிறைய குறிப்புகள் டு டூ லயே இருக்கு. வருஷம் முடியறதுகுள்ள ஒரு 50 குறிப்புகள் ஆவது செய்யனும் னு இருக்கேன்.. பார்ப்போம் :) நிச்சயம் செய்த குறிப்புகளுக்கு பிண்ணூட்டமும் தருவேன் :)
மீண்டும் என் வாழ்த்துக்கள்!
அன்புடன்,
சந்திரா

வாழ்த்துக்கள். கதை, சமையல், கைவேலைபாடு, கவிதை என அனைத்திலும் கலக்கும் வனிதாவுக்கு என் வாழ்த்துக்கள்.எங்களுக்கு மேலும் பல வித்தியசமான புதிய குறிப்புகள் தர வேண்டும். நீங்கள் சீக்கிரமாகவே 1000 குறிப்புகள் கொடுக்க வேண்டும்.

Vanitha akka... 500 samayal kurippugalai engalukku vaari vazhangiya ungalukku en manamarndha vazhthukkal... Aththudan ungalai "ARUSUVAI IN ALL ROUNDER" endru en saarbil pattam vazhangi Gouravikkiren...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஆல் இன் ஆல் வனி அக்கா வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.... உங்களோட குறிப்பிலிருந்து நிறைய (அடை தோசை, கோவில் புளியோதரை, கறிவேப்பிலை குழம்பு, பலாக்கொட்டை பொடிமாஸ், இஞ்சி குழம்பு, முட்டை குழம்பு, இன்னும் நிறைய... இப்போதைக்கு இவ்வளவே ஞாபகத்தில் உள்ளது). செய்திருக்கிறேன், இன்றைக்கு கூட உங்க குறிப்பிலிருந்து தக்காளி சாதம் (வறுத்தரைத்த பொடி சேர்த்து செய்யும் முறை) செய்தேன். சுவை அபாரமா இருந்தது. இன்னும் பல 100 குறிப்புகள் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மிக்க நன்றி சுகி... நீங்க, லாவி, சீதாலஷ்மி, ரம்யாலாம் ஊக்கப்படுத்தினதால் தான் இத்தனை விரைவில் இத்தனை குறிப்பு தர முடிஞ்சுது. அதுக்காக என் தோழிகள் உங்களுக்கே முதல் நன்றி. தேன்க்யூ தேன்க்யூ சோ மச் :)

500 குடுக்கறீங்களா இல்லையான்னு மிரட்டி செய்ய வைத்த லாவியை காணோம்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து... நன்றி நன்றி. :) 1000!!! எங்கையோ இருக்கு... இன்னும் எத்தனை வருஷமோ!!! 500 தொட 4 வருஷம் ஆயிருக்கே ;)

சந்திரா... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து மறக்காம பிடிச்சுதான்னும் சொல்லுங்க. :)

கௌதமி... மிக்க நன்றி. நம்ம தனுஷ் சொல்வது போல... எதாவது ஒன்னு முழுசா தெரிஞ்சா அதை மட்டும் செய்வேன்... எனக்கு எதுவுமே ஒழுங்கா வரல, அதான் எல்லாத்துலையும் காலை வெச்சுட்டு இருக்கேன் ;)

நித்யா... அடடா பட்டமெல்லாம் கொடுத்திருக்கீங்க :) நன்றி நன்றி.

ஷீபா... மிக்க நன்றி. இத்தனை குறிப்பு செய்திருக்கீங்களா??? மகிழ்ச்சியா இருக்குங்க. :)

தோழிகளே... உங்களை போல் கொடுக்கும் குறிப்புகளை பார்த்து பதிவிட்டு ஊக்கப்படுத்தவும், செய்து பார்த்து மறக்காம குறிப்பை தேடி பதிவிட்டு கருத்து சொல்லி ஊக்கப்படுத்தவும், எப்ப குடுக்க போறீங்க அடுத்த குறிப்புன்னு விடாம என்னை சுறு சுறுப்பா வெச்சிருக்கவும் என்னை சுற்றி அறுசுவையில் பலர் இருப்பதே 500 குறிப்புக்கு காரணம். அதுக்காக உங்க எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் தேன்க்ஸ். :) இந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களையே சேரும். நன்றி மீண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆல் இன் ஆள் வனி, இன்று 500 ஐ தொட்ட உங்கள் குறிப்புகள் நாளை 1000 ஐ தொட என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நன்றி நன்றி. ஒரே நாளில் எப்படிங்க 500 குடுக்குறது ;) ஹிஹிஹீ. சும்ம விளையாட்டுக்கு தான்... :) உங்க வாழ்த்து பளிக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருசுவையை காக்கும் புரவலர்களில்(patronizer) நீங்களும் ஒருவர்.உங்கள் பங்களிப்பு பல வருடங்கள் தொடர வாழ்த்துக்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்