பொல் சம்பல்

தேதி: July 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

1. தேங்காய் துருவல் - 1 கப்
2. சின்ன வெங்காயம் - 3
3. மிளகாய் வற்றல் - 3
4. உப்பு - சுவைக்கு
5. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி [விரும்பினால்]
6. டின் டூனா மீன் - 1 மேஜைக்கரண்டி [விரும்பினால்]


 

தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றலை விதை நீக்கி சேர்த்து இடிக்கவும். அல்லது மிக்சியில் நீர் இல்லாமல் சுற்றி எடுக்கவும்.
இதில் உப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
விரும்பினால் வெங்காயத்துடனே டூனா மீன் சேர்த்து இடித்து எடுக்கலாம்.
கடைசியாக கலவையுடன் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம். எலுமிச்சை சேர்க்காமலும் பரிமாறலாம்.


அதிக நேரம் மிக்ஸியில் சுற்றிவிட கூடாது. மிளகாய் அரைக்கப்பட்டு தேங்காயோடு ஒன்றாக கலந்தால் போதுமானது. பொல் என்றால் தேங்காய் (நன்றி இமா :)) இது இலங்கையில் சுவைத்து மிகவும் பிடித்த பக்க உணவு. இது இடியாப்பத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். நம்ம தோசைக்கும் நல்லா இருக்கும். எங்கள் ட்ரைவர் சொன்னதை வைத்து முயற்சித்தது. சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு ஸ்பெஷல் தேன்க்ஸ் டூ இமா. :) இமா சொன்னபடி இது சாதத்துக்கும், ப்ரெட்டுக்கும் கூட சூப்பரா இருக்குமாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

;)))))) //பொல் என்றால் தேங்காய்// ;))) ம்... பாட்டுக்கு சந்தோஷமா குறிப்பை போட்டுட்டு போகாம... இமா பேசுறதை எல்லாம் இப்புடியா பப்ளிஷ் பண்றது!! ;)))

‍- இமா க்றிஸ்

வனிதா,
குறிப்பின் பெயரை படித்தவுடனேயே இதை எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று நினைத்தேன்... கண்டு பிடித்து விட்டேன்...

நம்ம ரமணி சந்திரனின் வண்ண விழி பார்வையிலே கதையில் தான் இதே தேங்காய்ச் சம்பல் வருகிறது... ஹி ஹி இதெல்லாம் நமக்கு மறக்காது இல்லை...
சுவாரசியமான விதமாக, அந்த கதையில் ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் வனிதா தான் :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இமா... அதெப்படி சொல்லாம போடுறது? யார் சொல்லி குடுக்கறாங்களோ அவங்க நமக்கு நெருக்கமானவங்கன்னா அவங்களை அறிமுகம் செய்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கே :) அதை எப்படி மிஸ் பண்ண?

பிந்து... அகா... எனக்கு பழக்கமில்லாத கதை பகுதி பக்கம் போயிட்டீங்களே... பட் இண்ட்ரஸ்டிங்க்... ;) நன்றி பிந்து பகிர்ந்து கொண்டமைக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா