மோதகம்

தேதி: August 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

கடந்த குறிப்பில் பிராமண இல்லங்களில் தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளைப் பார்த்தோம். இன்று சாதாரணமாக அனைவரது இல்லங்களிலும் தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகள் செய்முறையைப் பார்க்கலாம். இங்கு இனிப்பு பருப்பு பூரணம் கொண்டு செய்யப்படும் கொழுக்கட்டைக் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளே வைக்கும் பூரணத்திற்கு அவரவர் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மேல்மாவு ஒன்றுதான். இந்தக் குறிப்பினை நமக்காக வழங்கியவர், திருமதி. சாந்தி வரதராஜன் அவர்கள்.

 

அரிசி மாவு - 4 கப்
கடலைப் பருப்பு - 2 1/2 கப்
வெல்லம் - அரைக் கிலோ
தேங்காய்த்துருவல் - 2 1/2 கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு வேகவைக்கவும். மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவினை போட்டு, அதில் இரண்டு கப் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு அழுத்திக் கிளறிவிடவும்.
பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் ஊற்றி, கைகளால் பிசைந்து, மாவு மிருதுவாக இருக்குமாறு செய்யவும்.
ஊறவைத்துள்ள பருப்பை நன்கு வேகவைத்து எடுத்து, நீரை வடித்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, கைகளால் அழுத்தி பிசையவும். பருப்பு ஒன்றிரண்டாக நசுங்கி, அரைத்ததுபோல் வரவேண்டும். இல்லையெனில் அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளலாம்.
பிறகு துருவியத் தேங்காயை வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்க வதக்கி எடுக்கவும்.
வாணலியில் நுணுக்கிய வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் விடாமல் பாகு காய்ச்சவும். தேவையெனில் கைகளில் ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி தெளித்துவிட்டு பாகு காய்ச்சவும். வெல்லம் கரைந்து பாகானவுடன் அதில் நுணுக்கி வைத்துள்ள பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்கு கிளறிவிட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். இந்தப் பூரணத்தில் அவரவர் விருப்பம் போல் ஏலக்காய், வறுத்த முந்திரி, பொரித்த கிஸ்மிஸ் என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது கொழுக்கட்டை பிடிக்க வேண்டும். இதற்கு ஒரு எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
பிறகு கைகளால் அழுத்தி அதனைக் கிண்ணம் போல் செய்யவும். அதனுள்ளே சிறிது பூரணத்தை வைக்கவும்.
பின்னர் அதன் ஓரங்களை, விரும்பிய வடிவில் மூடவும். உள்ளே வைக்கும் பூரணத்தின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. அதேபோல், கிண்ணமாக மாவை பிடிக்கும் போது மிகவும் மெல்லியதாக பிடிக்காமல் சற்று தடிமனாக, அனைத்துப் புறங்களிலும் ஒரே அளவு இருக்குமாறு பிடிக்கவேண்டும்.
பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி, பானையில் வைத்து வேகவிடவும்.
சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வெந்த பிறகு இறக்கி கொழுக்கட்டைகளை எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi,
babuvukkum, santhi varatharajan avargalukkum mikka nandri, vinayagarukku saithu padaikka nalla murail,mothagam saimoorai solliullar.kandippaga nan saithu padaippan. meendum oru moorai ennudaya nandri.
vimala.k

ifzi
dear sister
modhaham seivadhatrku arisi maa varutthadha thaevai?pls.help

ifzi

ifzi
dear sister
modhaham seivadhatrku arisi maa varutthadha thaevai?pls.help

ifzi

ifzi
dear sister
modhaham seivadhatrku arisi maa varutthadha thaevai?pls.help

ifzi