சிக்கன் சேவு சமையல் குறிப்பு - 23204 | அறுசுவை


சிக்கன் சேவு

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : திங்கள், 09/07/2012 - 00:45
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

  • சிக்கன் எலும்பில்லாதது - 100 கிராம்
  • அரிசிமாவு- 25 கிராம்
  • கான்ப்ளவர்-25 கிராம்
  • கடலைமாவு-25 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
  • சிக்கன் 65 பொடி- 1 ஸ்பூன்
  • சீரகம்- கால் ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு
  • எலுமிச்சை சாறு- 4 ஸ்பூன்

 

  • சிக்கனை சுத்தம் செய்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்து தனியாக வைக்கவும்.
  • அதில் எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து அரைமணீ நேரம் ஊற விடவும்.
  • கையில் எண்ணெய் தேய்த்து சிறு உருண்டை எடுத்து சுண்டுவிரல் அளவு நீளவாக்கில் உருட்டவும்.
  • எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  • அதன் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றி பரிமாறவும்.



இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..



ஹாய் ஆமினா

இனிப்பு சேவு ,கார சேவு தான் தெரியும். இது வித்தியாசமான குறிப்பு . கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன் .நன்றி .

சிக்கன் சேவு

புதுசாக இருக்கு.அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.