சிக்கன் பிரியாணி

தேதி: August 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
தனியா தூள் - 3 மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - கால் கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
முந்திரி - 30
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

அரிசியில் தண்ணீர் ஊற்றி 45 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு எடுத்து பார்த்தால் பொலபொலவென்று இருக்க வேண்டும்.
இதற்கு தேவையான வாசனைப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப ஏலக்காய், முந்திரி மற்றும் இதர வாசனைப் பொருட்களின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கோழிக் கறியினை சுத்தம் செய்து, அதிகம் எலும்பில்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கருகிவிடக்கூடாது. ஆனால் நிறம் மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின தக்காளி, புதினா போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், தனியா தூள், சோம்பு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு மிளகாய் தூள் போட்டு கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியான குழம்பாக வரும் வரை வதக்கவும்.
இதனுடன் சிக்கன் துண்டங்களைப் போட்டு மசாலா சிக்கனில் சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் தயிர் சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.
பிறகு 2 கப் தேங்காய் பால், 6 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.
சுமார் 10 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். முக்கால் அளவு வெந்ததும் முந்திரி, சிறிது புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, பிறகு தீயை குறைத்து தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அதன் மேலே பிரியாணி உள்ள பாத்திரத்தை வைத்து மூடிவிடவும்.
மூடியின் மேல் கனமான பொருளை வைக்கவும். மேலே நெருப்புத் துண்டங்களையும் வைக்கலாம்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்.

சூப்பர்.

good

maitha maavu enku wankalam??

தங்கள் கேள்வியை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கின்றது. மைதா மாவு எங்கு வாங்கலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றீர்கள்.

ஸ்விட்ஸர்லாந்தில் எங்கு மைதா கிடைக்கும் என்ற பொருளில் கேள்வி எழுப்பியுள்ளீர்களா, எங்கு மைதா வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற அர்த்தத்தில் கேட்டு இருக்கின்றீர்களா?

எதுவாயினும் நான் அறிந்த பதில், மைதா அனைத்து நாடுகளிலும் கண்டிப்பாக கிடைக்கும். baking தொழில் இல்லாத நாடு இல்லை. அதற்கு மைதாதான் அத்தியாவசிய மூலப் பொருள். all purpose flour என்ற பெயரில் அனைத்து super market களிலும் கிடைக்கும்.

அதுசரி, சிக்கன் பிரியாணி குறிப்பில் உங்களுக்கு மைதா நினைவு எப்படி வந்தது? :-)

thank u for this delicious recipe
who is this recipe's author?
keep on.......

god is the best

Hi
first of all thank you for the excellent recepe
After coming to U.S. this is the first time i am having such a good biriyani.. i tried it and it came out to be excellent.
it has come out really well... and i liked it so much...
thanks once again for the excellent recepe

உங்களுடைய ரெசிபியை பார்த்தேன் இதில் நெய் ஒரு மேசைக்கரண்டி டால்டா ஒரு மேசைக்கரண்டி என்று குறிப்பில் உள்ளது இதற்கு எண்ணெய் தேவை இல்லையா

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம்

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம்

ஷர்மிளா பதில் அட்மின் தான் சொல்லனும்..அவர் குறட்டை விட்டு தூங்கிட்டிருப்பார்..டால்டாக்கு பதில் எண்ணை சேக்கலாம்..ஆனால் டால்டா தான் சுவை தரும்.

இன்னும் தூங்கலையா தளிகா... அருசுவை நாளை மீண்டும் திறக்கப்படும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இல்லையம்மா தூங்கனும்.
நாளை கோழி கூவியதும் கேட்டை திறந்துடனும் சரியா.என் வேலைய உங்கள்ட ஒப்படுச்சுட்டு போறேன்

ஒரு கிலோ பாஸ்மதி அரிசி என்ரால். எத்தனை கப் அரிசி வரும்.

அன்னாசி மொக்கு என்றால் என்ன? டால்டா என்றால் என்ன? அது போடாமல் சமைக்கலாமா? அதுக்கு இன்னொரு பெயர் ஏதும் இருக்கா? காரணம் மலேசியாவில் கிடைக்குமா என்று தெரியவில்லை..

முதல் தடவை செய்து பார்பதற்கு 2கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்?

ஹாய் ப்ரேமிதா அன்னாசி மொக்குன்னா ஆங்கிலத்தில் star anise மலாய் மொழியில் bunga lawang.
டால்டா ன்னா வனஸ்பதி(hydrogenated vegetable fஅட்).கிடைக்கவில்லை என்றால் நெய் அல்லது மார்ஜரின் உபயோகிக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றிங்க கவிசிவா... அழகாக விளக்கம் தந்ததற்கு..