ரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்

ஹாய் தோழிகளே

என் (4 month ) பேபி க்கு பாட்டில் பால் தான் கொடுக்குறேன் ... 3 weeks அ பால் குடிக்க மாட்ர.. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் குடிக்கணும் நு dr சொல்றார் .. பட் my பேபி 300ml கூட குடிக்க மாட்ர ... ஆல் செக் நோர்மல் பட் ஏன் பேபி பால் குடிக்க ல நு dr கூட கொழம்பி போய்ட்டாரு.. வெயிட் கூட கரெக்டா இருக்கு ....டுடே another dr அ consult பண்ண போறேன் பட் எனக்கு மனசே கஷ்டமா இருக்கு பீலிங் சோ badly .. பாட்டில் niple வாய் ல வைய்ததும்.. அழுகுது ... நாகால reject அப்புறம் துப்புற .. தலைய திருபிகுது .. பால் கொடுக்க ரொம்ப போராடுறேன் ... may be பல்லு வருதா நு கூட chck panon .. எனானு தெரில .. உங்களில் யாருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க ?? எனக்கு பதில் முடிந்தால் கொடுங்கள் தோழிகளே .. நன்றி .. :((((

hi friend, 4 month baby 1 litre milk kudikka chance illapa. i think its normal.dont worry abt this.weight normala iruntha kavala padathinka.cutti babies sila time nalla sapdum,sila neram onnum sapdathu.its normal. my baby now 11 month.so some experience.

ALL IS WELL

ashmirenjthi உங்க பதில் க்கு ரொம்ப நன்றி தோழி, வயித்துல காஸ் இருக்கு நு சொல்லிருகாங்க , டெய்லி gripe water கொடுக்குறேன், அப்புறம் எப்டி காஸ் நு தெரில mm ...பாட்டில் பால் க்கு காஸ் வரும் நு சொல்றாங்க .. அப்புறம் மில்க் kuddikum போது பால் மேல வருது , அதனால polysilane கொடுக்க சொல்லி இருகாங்க டாக்டர்... ம்ம்ம்ம் let's see, enku pathil azhitha elaa thozhiss kkum nanrigal

ஹாய் ப்ரீத்தி என் மகனும் ஒரு வருடம் பாட்டில் பால் குடிக்கவே இல்லை. நானும் நான்கு மாதத்தில் இருந்தே முயற்ச்சி செய்து தோற்றேன். தாய் பால் போதவில்லை என்றதும் மருத்துவர் ஆப்பிள் ஜீஸ் கேரட் ஜீஸ் கொடுக்க சொன்னார்.
ஆப்பிள் (அ) கேரட் சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 2 விசில் வைத்து அதை மிக்சியில் பால் கலந்து அடித்து நன்றாக வடிகட்டி கவனம் நன்றாக வடிகட்டி 20 மில்லி வீதம் குடுக்கலாம். அவன் செரிமானம் ஆவதை கவனித்து வாரம் ஒரு முறை சிறிது சிறிதாக மில்லி வீதம் அதிகரிக்கலாம்.
பால் பவுடர் ஸ்பூன் ல தான் குடுத்தேன் ஒரு வயசு ஆன பிறகு மருத்துவர் ஒரு பவுடர் எழுதி குடுத்தார் அதன் பிறகே பாட்டில் பால் குடித்தார் என் மகன். பால் வாசனை பிடிக்கலனா இப்படிதான் பன்னுவாங்க. அந்த பவுடர் பால் வாசனையை மறைத்துவிடுகிறது. அதனால் மருத்துவரை கேளுங்கள்.

Dreams Come True..

ஹாய் preety ,என் குழந்தைக்கு நான் தாய்பாலே கொடுக்கவில்லை. எனக்கும் பாலே இல்லை.எனக்கு guide பன்னவும் யாரும் இல்லை.நானும் இன்ருவரை வருத்தப்படுகிறேன்.formula milkதான் கொடுத்தேன்.உங்கள்baby ku antha milk taste பிடிக்காமல் இருக்கலாம்.veeru formula milk ட்ரை பன்னி பாருங்கள் v'th doctor's advice.gas இருக்குனு சொன்னாரா doctor,அவர் மருந்து ஏதும் கொடுக்கவில்லையா.gripe water கொடுங்கள்.நானும் இன்றுவரை ஒரு நாளைக்கு 1 தடவை கொடுப்பேன்.sila peer gripe water kodukka vendanu solluvangka.but naan en baby ku kodutheen.

ஹாய் தோழிகளே , மீண்டும் ப்ரீதி , today my பேபி பால் குடிக்கும் போது, வொமிட் பணிடுச்சு , லிட்டில் வொமிட் இல்லை ... பெரியவங்க வொமிட் பண்ற மாத்ரி , பணிடுச்சு, எனக்கு என்ன பண்றது நு தெரில, இப்போ தான் 1st டைம் இப்டி வொமிட் பணுது.. 60 ml குடிச்சுது, அதோட நான் நிறுத்தி இருக்கலாம் , பட் கொஞ்சம் force பண்ணேன்.. லாஸ்ட் ல குடிச்ச பால் எல்லாமே வோமிடிங் ல வந்துருச்சு, பேபி வோமிடிங் பண்றத பார்த்து நான் பயந்து போயிட்டேன் , அழுகை வந்துருச்சு, இது நோர்மலா ? இந்த மாத்ரி கொழந்தைங்க பெருசா (Big quantity ) வொமிட் பண்ணுமா? already பால் குடிக்க வைக்க கஷ்ட படுறேன், இதுல வொமிட் வேற ... ஒண்ணுமே ஓட மாட்டேங்குது ,

thx 4 ur reply subanya,juice koduka venam nu doctor solraru, en baby ku 4 month thaan aguthu, athanala ipo juice koduka venam nu solitaru,

kalai thx for ur reply, எனக்கும் தாய் பால் இல்லை.. இந்த நிமிஷம் வரைக்கும் கஷ்டமா இருக்கு ... எவ்வளவு வாட்டி ட்ரை பண்ணி பாத்துட்டேன் .. நோ use ... எனக்கும் guide பண்ண யாரும் இல்லை .. நெட் ல தேடி தேடி தான் எல்லாமே கத்துகிட்டேன் ... gripe வாட்டர் கொடுக்க கூடாது நு தான் எனக்கு தெரிஞ்ச தோழிஸ் சொல்றாங்க. பட் நான் கொடுக்குறேன் ... உங்க பதிலா பாத்ததும் ரொம்ப ஆறுதலா இருக்கு .. நீங்க சொன்ன மாத்ரி போர்முல மில்க் change பண்ணி கூட பாத்தேன்.. பேபி kuddika மாட்ர.. mmm

உங்களின் இந்த இழையை பார்த்ததும் பதில் சொல்லாமல் போக மனம் வரவில்லை.

எல்லாவற்றையும் படிக்கவில்லை. படித்ததை வைத்து சொல்கிறேன். முதலில் குழந்தை பிறந்தவுடனே சிலருக்கு பால் சுரக்காது. சிலருக்கு சில மணி நேரங்கள் ஆகலாம் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். சிலருக்கு குழந்தை பிறப்பதற்கு பல வாரங்கள் முன்பிருந்தே கூட சுரக்கலாம். குழந்தை சப்பி குடிக்க குடிக்க பால் சுரப்பு அதிகரிக்கும். இது சப்ளை அண்ட் டிமாண்ட் முறை தான். அதவாது குழந்தையின் தேவைகேற்ப பால் சுரக்கும். அந்த நிலைக்கு உடல் வருவதற்கு குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும். மூன்று நாட்களில் நீங்க இதை டிசைட் செய்தது ரொம்பவே சீக்கிரம். அதுவும் இல்லாமல் உங்களின் மருத்துவர் உங்களை ஊக்கப்படுத்தாதது வேதனைக்குரியது. குழந்தை பிறந்தவுடன் குறைந்தது பதினைந்து நாட்கள் வரையிலும் எடை குறைய தான் செய்யும். பிறகு தான் ஏறும். பிறந்து ஒரு வாரம் வரையிலும் கூடா ஒன்றுமே இல்லாமல் கூட குழந்தையால் உயிர் வாழ முடியுமாம். யாருங்க உங்களை தினம் தினம் எடையை செக் செய்ய சொல்லி கொடுத்தார்கள்? குழந்தைகளுக்கு முதலில் பதினைந்து நாள், பிறகு மாததிர்க்கொரு முறை எடை செக் செய்தால் போதுமானது. நீங்கள் ஒரு நல்ல குழந்தை நல மருத்துவரை கண்டிப்பாக பாருங்கள். இப்பொழுது குழந்தை பால் குடிக்க வில்லை என்று வந்த நீங்கள் குழந்தை பிறந்தவுடன் வந்திருந்தால் தாய் பால் சுரக்க வைக்க தோழிகள் பல ஆலோசொனைகளை சொல்லியிருப்பாங்களே? இங்கே மன்றத்தில் அதை பற்றி நிறைய பேசியிருக்கோம். நேரமிருந்தால் படித்து பாருங்கள்.
குழந்தைக்கு நான்கு மாதம் ஆகி விட்டதல்லாவா? நீங்கள் மாற்று உணவை ஆரம்பிக்கலாமே? உங்களின் மருத்துவரிடம் கேட்டு ஆரம்பிங்க. எப்பொழுதுமே குழந்தையை போர்ஸ் செய்து அதிகமாக புகட்டாதீர்கள். கண்டிப்பாக குழந்தைகளுக்கு தங்களின் பசி தெரியும். அதற்க்கு தகுந்த மாதிரி தான் அவர்களும் சாப்பிடுவார்கள்.

குழந்தைக்கு காஸ் இருக்கு என்று சொல்லியிருக்கீங்க. நீங்கள் பால் புகட்டும் போது சரியான பொசிஷனில் தான் கொடுக்கறீங்களா என்று பார்க்கவும். சில நேரங்களில் பொசிஷன் சரியில்லை என்றாலும் கூட காஸ் உருவாக காரணமாக இருக்கலாம். நீங்கள் உபயோகிக்கும் பாட்டலில் உள்ள நிப்ப்ளில் உள்ள ஓட்டை பெரியதாக இருக்கிறதா என்றும் பார்க்கவும். பால் புகட்டிய பின்னர் கண்டிப்பாக ஏப்பம் விட வைக்கவும். குடித்தவுடன் ஏப்பம் விட வைக்க முடியவில்லை என்றால் ஐந்து பத்து நிமிடம் விளையாட விட்டு திரும்பவும் ட்ரை பண்ணவும். குழந்தை விளையாடும் போது அதன் கால்களை பிடித்து சைக்கிள் ஓடுவது போன்று செய்யவும். இது சில நேரங்களில் காஸ் வெளியேற உதவும். குழ்னஹ்டை சாப்பிட்டு முடித்த உடன் இல்லாமல் வேறு நேரங்களில் அவர்களை சில நிமிடங்கள் குப்புற படுக்க வைக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழி ,என் குழந்தையும் இதை போல தான் செய்தான் ,தாய் பால் முடிந்தால் கொடுங்கள் ,சில குழந்தைகள் தாய் பால் சுவைக்க இப்படிதான் செய்வாங்க ,இல்லையெனில் பருப்பு அவித்த தண்ணிர்,சதம் வாடி தண்ணிர் ,கொடுக்கலாம் .இப்படி தான் நானும் செய்தேன் ,கவலை வேண்டாம்,குழந்தை வெயிட் ம் குறையாது,கேரட் நன்கு பட்டர் இல் வதக்கி 1 /2 டம்ளர் வாட்டர் ஊற்றி கூகர் இல் 1 விசில் விட்டு மிக்ஸ்சியில் அடித்து வடிகட்டி அதில் உப்பும் ,பெப்பர் பொடியும் கொஞ்சமஹா சேர்த்து கொடுங்கள் .

thanks 4 ur reply anandavalli

மேலும் சில பதிவுகள்