வெஜ்ஜி சிக்கன் சாலட்

தேதி: July 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

போன்லெஸ் சிக்கன் - 6 துண்டுகள்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று (சிறியது)
கேரட் - ஒன்று
காலிப்ளவர் - ஒரு கப்
குடைமிளகாய் (காப்ஸிகம்) - ஒரு கப்
வெள்ளரி - பாதி
லெட்டஸ் (Lettuce) - ஒரு கப்
முட்டைகோஸ் (Purple cabbage) - ஒரு கப்
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - சிறிது
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
கெச்சப், ஹாட் சாஸ் - சிறிது (விரும்பினால்)


 

எலும்பில்லா சிக்கனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதில் சிறிது உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்.
வெங்காயம், கேப்ஸிகம், தக்காளி நறுக்கி வைக்கவும். கேரட், வெள்ளரியை வட்டமாக நறுக்கி வைக்கவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக ஆய்ந்து வைக்கவும்.
முட்டைகோஸை நீளவாக்கில் நறுக்கவும். லெட்டஸ் இலைகளை தேவையான அளவு எடுத்து வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் விட்டு சிக்கன் துண்டுகளை பரப்பி வைக்கவும். (சிக்கனை பொரிய விட கூடாது. அவியும் வரை விட்டால் போதும்)
சிக்கன் ஒரு புறம் அவிந்ததும் திருப்பி விட்டு அதோடு கேரட் காப்ஸிகம் காலிப்ளவர் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி வைக்கவும். (தேவையானால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்க்கலாம்)
காய்கள் பாதி வெந்ததும் வெங்காயம் சேர்த்து மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.
காய்கள் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கெச்சப் சாஸ் சேர்த்து கிளறவும்.
நறுக்கிய முட்டைக்கோஸ் லெட்டஸ், வெள்ளரி, தக்காளி ஆகியவற்றோடு சிக்கன் காய் கலவை சேர்த்து பரிமாறவும். மிகவும் சுவையான, ஆரோக்யமான வெஜ்ஜி சிக்கன் சாலட் தயார்.

மிளகாய் தூள் சேர்ப்பது சிக்கன் வாசம் தெரியாமல் இருக்கவே. எனவே மிக குறைந்த அளவு போதுமானது. சாஸ், கெச்சப் இல்லாமலும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அபி... முதல் குறிப்பு... ரொம்ப அட்டகாசமா பார்ட்டிக்கு ஏற்ற சாலட் வகை :) கலக்குங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் குறிப்பா கலக்குங்க...

வனி சொன்னாபுல இந்த சாலட் பார்டிக்கு ரொம்ப நல்ல வரும்னு நினைக்கிறேன், அப்பறம் என்ன செய்து பார்த்திட வேண்டியது தான்.

மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Abi... Chicken veggi salad simply superb pa... First kurippu romba asathal... Idhu pola innum pala 100 kurippugal vazhanga vazhthukkal pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அபி முதல் குறிப்பா கலக்கலா இருக்குங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுசுவை அட்மின் குழுவினருக்கு என் முதல் நன்றிகள்.. என் முதல் குறிப்பை வெளியிட்டமைக்கு...

வாழ்க வளமுடன்

என் முதல் குறிப்புக்கு முதலாவதாக வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி வனிதா. உங்களை எப்போதும் மறக்கமுடியாது. மிக்க நன்றி.. நீங்கள் சொன்னது போல் பார்ட்டிக்கு ஏற்றது. அவரவர் விருப்பத்திற்க்கு காய்கறிகளை சேர்க்கலாம்.
நன்றி. அபி.

வாழ்க வளமுடன்

என் முதல் குறிப்பை பார்த்து வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றி ப்ரேமா. நிச்சயம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க..
நன்றி. அபி.

வாழ்க வளமுடன்

ரொம்ப நன்றி நித்யா.. பல 100 குறிப்புக்கள் கொடுக்க முயற்சி பண்றேன்.. இப்போ தான் ஆரம்பிச்சிருக்கேன். அறுசுவையில் போடுவதற்காகவே புதிதாக ட்ரை பண்றேன். தாங்க்ஸ் நித்யா..
நன்றி.. அபி.

வாழ்க வளமுடன்

மிக்க நன்றி ஸ்வர்ணா. உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
நன்றி. அபி.

வாழ்க வளமுடன்

வெஜ்ஜி சிக்கன் சாலட். நள்ள சத்தான குறிப்பா வெஜ் நான்வெஜ் ரென்டும் மிக்ஸ் பன்னி வித்யாசமா கலக்கிடிங்க.வாழ்த்துக்கள் பா.

அபி,
அனைவருக்கும் ஏற்ற எளிமையான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அபி ...சூப்பரான குறிப்பு."வெஜ்ஜி சிக்கன் சாலட்-அருமை "வாழ்த்துக்கள் !

ரொம்ப நன்றி உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மிகவும் ஆரோக்யமான சாலட். முயற்சித்து பாருங்கள்..
நன்றி - அபி.

வாழ்க வளமுடன்