ரசகுல்லா

image

வழங்கியவர் : CHITHRA DURAI

தேதி : ஞாயிறு, 20/08/2006 - 14:34

ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்

பரிமாறும் அளவு :

5
1 vote
Your rating: None
 

 

  • பால் – ஒரு லிட்டர்
  • சீனி – நானூறு கிராம்
  • மைதா – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் – ஐந்து
  • ரோஸ் எசன்ஸ் – இரண்டு சொட்டு
  • சிறிய எலுமிச்சம்பழம் – ஒன்று

 

  • ஏலக்காயை தோலுரித்து பொடிக்கவும். எலுமிச்சையை நறுக்கி சாறு பிழிந்து வைக்கவும்.
  • பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சைச்சாறு கலக்கவும்.
  • பால் திரிந்ததும் இறக்கி ஒரு துணியில் தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.
  • பனீரை தனியாக எடுத்து மைதா, ஏலப்பொடி சேர்த்து கலவை மெதுவாக ஆகும்வரை பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
  • சீனியில் இரண்டு டம்ளர் (நானூறு மிலி) தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
  • பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளைப் போட்டு பனிரெண்டு நிமிடங்கள் வேக விடவும் (மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை லேசாக தண்ணீர் மேலே தெளிக்கவும்).
  • பின் கீழே இறக்கி ரோஸ் எசன்ஸ் கலந்து ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும்.






not good