www.arusuvai.com
ரசகுல்லா
தேவையானப் பொருட்கள்
- பால் – ஒரு லிட்டர்
- சீனி – நானூறு கிராம்
- மைதா – இரண்டு டேபிள் ஸ்பூன்
- ஏலக்கய் – ஐந்து
- ரோஸ் எசன்ஸ் – இரண்டு சொட்டு
- சிறிய எலுமிச்சம்பழம் – ஒன்று
செய்முறை
- ஏலக்காயை தோலுரித்து பொடிக்கவும்.
- எலுமிச்சையை நறுக்கி சாறு பிழிந்து வைக்கவும்.
- பாலை அடி கணமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சை சாறு கலக்கவும்.
- பால் திரிந்ததும் இறக்கி ஒரு துணியில் தண்ணீர் முழுதையும் வடிகட்டவும்.
- பனீரை தனியாக எடுத்து மைதா, ஏலப்பொடி சேர்த்து கலவை மெதுவாக ஆகும்வரை பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
- சீனியில் இரண்டு டம்ளர் (நானூறு மிலி) தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
- பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளைப் போட்டு பனிரெண்டு நிமிடங்கள் வேக விடவும் (மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை லேசாக தண்ணீர் மேலே தெளிக்கவும்).
- பின் கீழே இறக்கி ரோஸ் எசன்ஸ் கலந்து ஆற வைத்து ப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும்.
-
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
பத்து நிமிடங்கள் |
முப்பது நிமிடங்கள் |