உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பாசிப்பருப்பு பூரி

 


தேவையானப் பொருட்கள்

  • மைதா – கால் கிலோ
  • பாசிப் பருப்பு – ஐம்பது கிராம்
  • வெங்காயம் – ஒன்று
  • மிளகாய்ப் பொடி – அரை டீ ஸ்பூன்
  • சீரகம் – கால் டீ ஸ்பூன்
  • உப்பு – ஒரு டீ ஸ்பூன்
  • எண்ணை – அரை லிட்டர்

செய்முறை

  • பாசிபருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
  • வெங்காயத்தை சன்னமாக அரியவும்.
  • பருப்பு நன்றாக அரைபட்டதும் நறுக்கிய வெங்காயம், மிளகாய்ப் பொடி, சீரகம், உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் அரைத்து எடுக்கவும்.
  • மாவை சலித்து அரைத்தவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து (முடிந்த அளவு குறைவான தண்ணீர் உபயோகித்து) பிசையவும்.
  • மாவு மெதுவாகி ஒட்டாமல் வரும் வரை (குறைந்தது பத்து நிமிடம்) கைகளினால் பிசையவும்.
  • பிறகு சற்று தடிமனான சிறிய அப்பளங்களாக இடவும்.
  • எண்ணையை நன்கு சூடாக்கி அப்பளங்களை போட்டு பூரியாக பொரித்து எடுக்கவும்.

வழங்கியவர்

திருமதி. சித்ரா செல்லதுரை, குவைத்

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

நான்கு நபர்களுக்கு இருபத்தைந்து நிமிடங்கள்
random food image


comments