www.arusuvai.com
பாசிப்பருப்பு பூரி
தேவையானப் பொருட்கள்
- மைதா – கால் கிலோ
- பாசிப் பருப்பு – ஐம்பது கிராம்
- வெங்காயம் – ஒன்று
- மிளகாய்ப் பொடி – அரை டீ ஸ்பூன்
- சீரகம் – கால் டீ ஸ்பூன்
- உப்பு – ஒரு டீ ஸ்பூன்
- எண்ணை – அரை லிட்டர்
செய்முறை
- பாசிபருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
- வெங்காயத்தை சன்னமாக அரியவும்.
- பருப்பு நன்றாக அரைபட்டதும் நறுக்கிய வெங்காயம், மிளகாய்ப் பொடி, சீரகம், உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் அரைத்து எடுக்கவும்.
- மாவை சலித்து அரைத்தவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து (முடிந்த அளவு குறைவான தண்ணீர் உபயோகித்து) பிசையவும்.
- மாவு மெதுவாகி ஒட்டாமல் வரும் வரை (குறைந்தது பத்து நிமிடம்) கைகளினால் பிசையவும்.
- பிறகு சற்று தடிமனான சிறிய அப்பளங்களாக இடவும்.
- எண்ணையை நன்கு சூடாக்கி அப்பளங்களை போட்டு பூரியாக பொரித்து எடுக்கவும்.
-
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
இருபத்தைந்து நிமிடங்கள் |