ரவா கேசரி(ஹோட்டல் ஸ்டைல்)

தேதி: July 11, 2012

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (14 votes)

 

ரவை - ஒரு கப்
தண்ணீர் -3 கப்
சர்க்கரை -1 1/4 கப்
வறுத்து பொடித்த முந்திரி -1டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்-1டீஸ்பூன்
டால்டா-கால் கப்
கேசரிபவுடர்-சிட்டிகை


 

முதலில் தண்ணீரை கொதிக்கவிட்டு கொதிவந்ததும் கேசரிபவுடர் சேர்த்து பின் ரவையைபோட்டு கட்டியில்லாமல் கிளறவும்.
பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும்
நீர் வற்றி கெட்டியாகும்போது டால்டாவை சிறிது சிறிதாக ஊற்றி பதம் வரும்போது கடைசியாக ஏலக்காய்த்தூள்,முந்திரி துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும்


இது ஹோட்டலில் சாப்பிட்ட கேசரி பிடிக்க சர்வரிடம் கேட்டு செய்த மெனு..
அவ்ர் சொன்னது கேசரிக்கு ரவையை வறுக்காம சேர்ப்பதும் உப்புமாவுக்கு வறுப்பதும் சரின்னு..மேலும் நெய்யைவிட டால்டா சேர்க்கும்போது சுவை கூடுமென்று..இந்த டிப்ஸ்படி செய்ததில் அதே சுவை கிடைக்கிறது...

மேலும் சில குறிப்புகள்


Comments

இளவரசி அக்கா, நேற்று இதை செய்து சாப்பிடாச்சு.., மாறுதலான சுவையுடன் நல்ல இருந்தது!

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!

நான் ஒரு குறிப்பு சேர்க்கும் சமயத்துல் நீங்க பதிவு போட்டதால கண்ணுல பட்டுடுச்சு..:)

பிடிச்சுதா..ஆரியபவனில் சாப்பிடும் சேசரி பிடிக்கும் அதான் அவரிடம் கேட்டப்போ வறுக்காம ரவை சேர்க்கணும்ன்னு சொன்னது ஆச்சர்யமா இருந்தது..

சரின்னு முயற்சி பண்ணி பிடிக்கவும் போட்டேன்...

இன்னும் ஒரு வாரம் இருக்கு கிளம்ப...நிறைய வேலைகள்
அதோட சேர்க்கணுமின்னு வச்சிக்கிட்டு போடாம இருக்க குறிப்புகள் நினைவுக்கு வர...அத சேர்த்துகிட்டு இருக்கேன் ...:)
நன்றி..வந்ததும் சமயம் கிடைக்குபோது பேசறேன்..நெம்பர் அதேதான்..:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளா, கேசரி முறை ரொம்ப ஈசியான முறையா இருக்கே. கொதிக்கும் தண்ணீல ரவையை கொட்ட தான் பயமா இருக்கு ;( முழுசையும் கொட்டி கிளறதுக்குள்ளே முன்னாடி கொட்டினது வெந்து தள்ளி கட்டி கட்டி நிக்குமே. இருந்தாலும் விடுறதா இல்லை. ஹோட்டல் செய்முறைன்னு சொல்லிட்டீங்க. செய்து பார்ப்பேன் ஆனா டால்டா இல்லையே ;( அதனால் ஊருக்கு வரும்போது செய்துட வேண்டியது தான்.( இந்த லாவியும், வனியும் வர்றாங்களான்னு மட்டும் பார்த்து சொல்லுங்க. நான் இப்படி ஒளிஞ்சுக்கறேன் ;)) ஏன்னா, ரொம்ப நாளா அவங்க குறிப்பை செய்துட்டு சொல்றேன் சொல்றேனு அல்வா கிளறுனபடியே இருக்கேன். அதுக்கு தான் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

:):)

பயமா இருந்தா கொதிக்காத சுடுநீரில் ரவையை கிளறி மைக்ரோவேவ் அவனில் வேகும் வரை இடையிடையே கிளறி 5 நிமிடங்கள் வைத்து பின் சர்க்கரை பொடியை போட்டு கிளறி டால்டாவேயும் ஊற்றி கிளறி பதம் வரும்வரை வைங்க..:)

அவன் எல்லாம் வெடிக்காது பயப்படமா வைங்க..நான் எல்லா ஸ்வீட்டும் அவனில்தான் முக்கியமா அல்வாக்கு ஒவன்தான் பெஸ்ட் ஜாய்ஸ்.
தொடர்ந்து கிளறும் சிரமம் இல்லை..

ரொம்ப நாளைக்குபின் உங்களோடு பேசியதில் மகிழ்ச்சிப்பா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.