காஷ்மீர் ரொட்டி

image

வழங்கியவர் : Asma

தேதி : ஞாயிறு, 20/08/2006 - 16:52

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • மைதா - 200 கிராம்
  • சலிக்காத கோதுமை மாவு - 200 கிராம்
  • கலக்கிய கெட்டி தயிர் - 3 டீஸ்பூன்
  • ப்ரெட் ஸ்லைஸ் - ஒன்று
  • பால் - அரை கப்
  • சீனி - ஒரு டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
  • உப்பு - ஒரு ஸ்பூன்

 

  • மைதாவையும், சலிக்காத கோதுமை மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, சீனி, பெருஞ்சீரகம், கலக்கிய கெட்டித்தயிர் அனைத்தையும் அத்துடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
  • ப்ரெட் ஸ்லைஸை ஓரம் நீக்கி, பாலில் நனைத்து பிழிந்து, மாவில் உதிர்த்து போட்டுநன்றாக மாவை பிசையவும்.
  • தோசைக்கல்லை நன்கு சூடாக்கி, மாவை வார்த்து அதில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
  • பிறகு இன்னொரு அடுப்பின்மேல் ஒரு க்ரில்லை வைத்து, நேரடி தனலில் இரண்டு பக்கமும் போட்டு தீயாமல் எடுக்கவும். இதற்கு சப்பாத்தி குருமா போன்று செய்து சாப்பிடலாம்.

Note:

எண்ணெய் சேர்க்காமல் செய்யும் இந்த ரொட்டி காஷ்மீர் மக்களின் அன்றாட உணவு. உடம்புக்கு நல்லது. 1. பிசைந்த மாவு பரோட்டா மாவு பதத்திற்கு இருக்கவேண்டும். அந்த பதம் வராவிட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து அந்த பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். 2. சலித்த கோதுமையைவிட சலிக்காத கோதுமை சத்து கூடுதலானது. அப்படி கிடைக்காவிட்டால் சாதாரண கோதுமை மாவையே சேர்த்துக்கொள்ளலாம். 3. க்ரில் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும். அதைக்கொண்டு எண்ணெய் சேர்க்காத பலவகையான சமையல்களை செய்யலாம்.