கிள்ளி வற்றல் (அரிசி வடகம்)

தேதி: August 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - ஒரு படி
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 200 கிராம்
இஞ்சி - 50 கிராம்
உப்பு - 4 டீஸ்பூன்
தண்ணீர் - 5 படி


 

முதலில் ஒரு படி தண்ணீரில் அரிசி மாவை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
மீதி 4 படி தண்ணீரை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து நன்றாக சூடானவுடன் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி வேகும் வரை கைவிடாமல் கிளறவும்.
வேகும் பதம் வரும்போது இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பிறகு நசுக்கி அதில் போட்டு கிளறவும். மாவு வெந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.
மாவை கையால் எடுக்கும் அளவுக்கு ஆறியவுடன், கையில் தண்ணீர் தொட்டு நனைத்துக்கொண்டு மாவை கிள்ளி எடுத்து சுத்தமான ஒரு துணியில் போட்டு வெயிலில் காயவைக்கவும்.
நன்றாக காய்ந்தவுடன் எடுத்து ஈரமில்லாத பாத்திரத்தில் போட்டுவைக்கவும்.


இதை செய்வதற்கு சித்திரை வெயில் போன்ற கடுமையான வெயில் ஏற்றது. வறுக்கும்போது எண்ணெய் சற்று அதிக சூடாக இருக்கவேண்டும்.

மேலும் சில குறிப்புகள்