பலா பழம்

தோழிகள் யாராவது
எனக்கு பலா பழத்தில் ஏதாவது ரெசிப்பி சொல்லுங்கள்

ஜெயா.

அன்பு ஜெயா!

பலாப்பழ பாயாசம்

தேவையான பொருட்கள்

பலாப்பழச் சுளைகள் - 20, 30
வெல்லம் - கால் கிலோ
நெய் அல்லது டால்டா தேவையான அளவு
ஏலக்காய் தேவையான அளவு

செய்முறை

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இது மிக சுவையாக இருக்கும்.

செய்து பாருங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு யோகராணி,

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்கிறேன்.

ஜெயா

மேலும் சில பதிவுகள்