ஆலு வெண்டை குழம்பு

தேதி: July 13, 2012

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

வெண்டைக்காய் -5
உருளைகிழங்கு-1
புளி-எலுமிச்சை அளவு
தக்காளி-1
பெரிய வெங்காயம்-1
பச்சைமிளகாய் 4
காயந்தமிளகாய்-2
மஞ்சள்தூள்-சிட்டிகை
தேங்காய்ப்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன்
தாளிக்க
கடுகு,வெந்தயம் ,சீரகம்,நல்லெண்ணெய்,கறிவைப்பிலை


 

முதலில் வெண்டைக்காயையும் உருளைக்கிழங்கையும் கழுவி டைமண்ட் வடிவில் நறுக்கவும்.
வெங்காயத்தயும்,தக்காளியையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
புளியை அரிசி கழுவிய நீரில் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,வெந்தயம் ,சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாகும்வரை சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளியை குழையும்வரை வதக்கிபின் வெண்டைக்காய் மற்றும் உருளைகிழங்கை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
பின் புளிக்கரைசல் ஊற்றி ,உப்பு,மஞ்சள்த்தூள் சேர்க்கவும்.
நன்றாக காய் வெந்து குழம்பு கெட்டியாகும்வரை கொதிக்கவிடவும்.
பின் இறக்குமுன் தேங்காய்ப்பால் பவுடரை வெந்நீரில் கலக்கி ஊற்றி அடுப்பை நிறுத்தி அதே சூட்டில் இரண்டுநிமிடங்கள் வைக்கவும்.


இதில் அழகுக்காகவும்,சீக்கிரம் வேகவும் வெண்டை மற்றும் உருளையை டைமண்ட் வடிவில் நறுக்கினால் நல்லது.காரத்திற்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி ,குறைத்து கொள்ளலாம்.குழம்பில் சிவந்தநிறம் விரும்பினால் மிளகாயின் அளவை குறைத்து 1டீஸ்பூன் சாம்பார்த்தூள் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்