கிட்ஸ் க்ரீன் பர்பி

தேதி: July 13, 2012

பரிமாறும் அளவு: 25 துண்டுகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

ரெடிமேட் பிஸ்தா பவுடர்-1 பாக்கெட்(250கிராம்)
சர்க்கரை-150கிராம்
நெய்- 2 டேபிஸ்பூன்


 

1 கப் நீரை கொதிக்கவிட்டு அதில் சர்க்கரை கலக்கவும்
ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு வைக்கவும்
ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் பிஸ்தாபவுடரை கொட்டி மிதமான தீயில் கட்டியில்லாமல் கலக்கி விடாமல் கிளறவும்..வாணலியில் ஒட்டும்போது நெய்யை சிறிதுசிறிதாக கொட்டி ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்


ரெடிமேட் பவுடர் கிடைக்கவில்லை என்றால் பிஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு மேலை உள்ள தோலை நீக்கிவிட்டு மைக்ரோவேவில் லேசாக ஈரம் போக வார்ம் பண்ணிவிட்டு மிக்ஸியில் கரகரப்பாய் பொடிக்கவும்.
பவுடர் பாக்கெட்டாக வாங்கினால் விரைவில் ரெடி செய்வது சுலபம்

மேலும் சில குறிப்புகள்