வெண்டைக்காய் பருப்புசாதம்

தேதி: July 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

வெண்டைக்காய்- கால் கிலோ
வெங்காயம்-2
பட்டைமிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
துவரம்பருப்பு- 50 கிராம்
சாதம்- 2 கப்
உப்பு--தேவைக்கு
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
பூடு- 8 பல்
தக்காளி- 2
பச்சைமிளகாய்-2
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை


 

பருப்பை அலசி அதில் தக்காளீ, பச்சைமிளகாய், பூடு, தூள் வகைகள் சேர்த்து வேக வைக்கவும்.

வெண்டைக்காயை நறுக்கிகொள்ளவும் (ஒரு இன்ச் அளவு)

வெறும் கடாயில் வெண்டைக்காயை உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பசை நீங்கியதும் வெங்காயம், பட்டைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சுருள வதக்கவும்.

பின் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதிவிடவும்.

பின் சாதத்தை கொட்டி கிளறி விடவும்.

விரும்பினால் நெய்யில் தாளித்த முந்திரியை பரிமாறும் போது சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

super dish for kids.. I am going to try

Thank You Amina