சொல்ல விரும்பினேன் - 8 !!

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

Prema... Super aalunga neenga... Unmailaye padikurappo rombave sandhosama iruku... Avanga ellarum vazhthiyadhu pola, neengalum ungal kudumbamum pallaandu kaalam seerum sirappuma vazhanum nu naanum vazhthuren pa... neenga en friend nu solradhula romba perumai padaren... pagirdhalukku nandri prema...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

புது அவதாரம்.... :)

ஐயோ!!! என் பங்குக்கு ஏதாவது கேக்கலாம்னா படுபாவி கனவுல கனவு கூட வர மாட்டேங்குது.....

வனி கனவு வர ஏதாவது ஐடியா சொல்லுங்களேன் ;)

மன்னிக்கவும், வசதி படைத்தவர்கள் தான் செய்யணும் என்று இல்லை. நடுத்தர வர்கத்தினரும் கூட தன் மனசுக்கு ஏற்ற மாதிரி சின்ன பொருளாகவோ அல்லது உணவு பண்டகளோ கூட வாங்கி குடுத்து அவர்களுக்கு சேவை செய்திட்டு இருக்காங்க.. கடவுள் இந்த கைகளை நமக்கு கொடுத்ததற்கு காரணம் நாம் பிறருக்கு குடுப்பதர்க்காகவே அல்லவா... தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வனிதா மேடம்,
இந்த தடவை கட்டாயம் லேப்டாப் எல்லாம் உடைய / உடைக்க வில்லை என நம்புகிறேன்... சீக்கிரம் வாங்க.. நீங்க இல்லாமல் இன்று இளவரசி மேடம் என்கிட்டே மாட்டிகிட்டாங்க... உங்களால் மட்டும் தான் என்னை மாதிரியான சூப்பர் human being எல்லாம் மேனேஜ் செய்ய முடியும் :)

இப்படி எல்லாம் சும்மா சும்மா லீவ் போட்டால் எப்படி??? சீக்கிரமா வந்து சேருங்க.... உங்களுக்கு யார் இவ்வளவு நாள் லீவ் தரது???? அது யாருன்னு எனக்கு மறக்காமல் சொல்லுங்க :)

சரி நான் தூங்க போறேன்... இன்னைக்கு வந்திருவீங்கன்னு நம்புகிறேன்...

Have a great day ahead :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வாவ்!!! நல்ல விஷயம்... உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட. இது போல் நான் போய் குட்டீஸ் கூட ஃபுல் டே இருந்து ஸ்கூட்டியில் ஊரை சுத்திட்டு வந்தது உண்டு (என்னை பார்த்தாலே அக்கா ஒரு ரவுண்டு போலாம்னு தான் முதல்ல கேட்பாங்க). ஆனால் இதுவரை அந்த ஏரியாவை விட்டு வெளியே அழைத்து போனதில்லை. ஏன்னா இதெல்லாம் திருமணத்துக்கு முன் வேலை பார்த்த காலத்தில். இப்போ இதுக்கெல்லாம் டைமே இல்லாம போச்சு. செய்யணும்னு ஆசை இருக்கு... பார்ப்போம். :) பகிர்வுக்கு நன்றி பிரேமா. பலருக்கும் செய்ய ஒரு எண்ணமும், ஆசையும் உருவாகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மகா சிவா.. எனக்கு தெரியலங்க... தேடி தான் சொல்லணும் :) பொதுவா நம்ம ஊரில் பாம்பு கடிக்கிற மாதிரி கனவுன்னா நல்லதுன்னு சொல்லி கேட்டிருக்கேன். வீடு இடிஞ்சி விழுறதுலாம், எனக்கு உங்க ஆழ் மனசுல இருக்க பயமுன்னு தோணுது. நேரம் கிடைக்கும் போது தேடி சொல்றேன்.

மகாலக்‌ஷ்மி... பலமுறை உங்களை தமிழில் பதிவு போட சொல்லிட்டேன்... கேட்க மாட்டங்கறீங்க... ;) பாருங்க நீங்க என்ன சொல்லிருக்கீங்கன்னே எனக்கு புரியல. தேன்க்ஸ் மட்டும் புரியுது... தேன்க்யூ மகா. முடிந்தவரை தமிழில் தட்டுங்க, படிக்க சுலபமா இருக்கும்.

பிந்து... லேப்டாப் உடையல, இண்டெர்னெட் போயிடுச்சு. எங்க ஏரியா முழுக்க வேலை பார்த்து நேற்று இரவு தான் சரி ஆனது. எனக்கு யார் லீவ் கொடுக்குறது அறுசுவையில் ;) அதுக்குலாம் இனி ஒரு ஆள் பிறந்து வரணும். எனக்கு நானே பாஸ்... லீவ் வேணும்னாலும் நானே தான் எடுத்துப்பேனாக்கும்.

நித்யா... இங்கையுமா கலாட்டா?? பாவம் என் சொல்ல விரும்பினேன் இழை விட்டுடுங்க ;)

ரூபி.. சொல்லுங்க... பிந்துக்கும் நித்யாக்கும் சொல்லுங்க ;) இங்கே அரட்டை கூடாதுன்னு.

தேன்மொழி... வெகு நாட்களுக்கு பின் பேசுறோம். எப்படி இருக்கீங்க? ஏன் இப்பலாம் வரது இல்ல... அவதாரமும் இல்லை ஒன்னுமில்லை... படிச்ச ஒரு விஷயத்தை சொன்னேன், இப்போ நிறைய படிக்க வைக்கறாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, இன்னைக்கு அரட்டை பக்கத்தை பார்த்தேன் அதில் காணாம போனவங்க லிஸ்ட்ல எங்களை கடத்திட்டீங்க.. உங்க அன்பால் :) காங்கோ ஜூஸ் கம்பெனி ஓனரை கடத்தவும் முடியுமோ? இல்லைன்னா நம்ம ப்ராடெக்ட் பக்கம் தான் யாராச்சும் நெருங்க முடியுமா? எப்பவும் அறுசுவையின் நினைப்பும், அட நம்ம சைட்டை தாங்க சொல்றேன்.. அப்புறம் அதில் இருக்கும் என்னையும், நான் மறக்க முடியாத அன்பு உறவுகளையும் மறக்க முடியுமா? இந்த வாரம் விருந்து வாரம் ஆகி போச்சு. எத்தனை வருஷமா ரெஸ்ட்ல இருந்தேனோ, இந்த வாரம் அத்தனை பெண்டு கழண்டு போச்சு. நல்ல வேலை. உடம்பு வேற லைட்டா சரியில்லாம போச்சு.(விருந்தை சாப்ட்டவங்க தானே அப்படி ஆகனும்னு நீங்க கேக்குறது என் காதில் விழுது.. இருந்தாலும் கண்டுக்காம இருந்தா தானே நமக்கும் கெவுரதை ;)) அதனால் லேப்பில உக்கார முடியல. தொடர்ச்சியா வரமுடியலனாலும் ஒருநாள் விட்டு ஒருநாளாச்சும் வர பார்க்கிறேன் எதாவது ஒரு வேலை வந்துடுது. உங்கள் அன்பு மறவா தேடுதலுக்கு நன்றிகள் வனி :) இனி தொடர்ச்சியா வருவேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பிந்து, நலமா? உங்களோடு முதல் முறை பேசுகிறேன் (சமையல் குறிப்பு தவிர) நேரடியாக..:) அரட்டையில் உங்கள் பதிவை பார்த்தேன். பழைய பதிவுகளை பார்த்துட்டீங்களா? இனி நீங்க என்னோட பேசுன மாதிரி தான் ;) அதையும் மீறி ஏதோ ஒரு அன்பிழை, நட்பிழை பேச வைக்கும் என்ற நம்பிக்கை ;) என்னையும் விசாரித்ததற்கு மிக்க நன்றி தோழியே. மீண்டும் சந்திப்போம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,
முதலில் நன்றி :) முதல் முறை பேசும் போதே என்னை தோழின்னு சொன்னதற்கு :)
எனக்கு தெரிஞ்சு இங்கே என்னை தோழின்னு சொன்ன ஒரே ஆள் நீங்க தான்... ரொம்ப நன்றி :D

நான் ரொம்பவே நலம் :) உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா?

உங்களுடைய பட்டி மன்ற வாதங்களை காண ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்... பட்டி மன்றம் பற்றி பேசும் போதெல்லாம் உங்களை பற்றியும் உத்திராவை பற்றியும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன்... ஆனால் இது வரை நேரில் பார்க்கும் வாய்ப்பு இல்லை.. இந்த முறை உங்கள் வாதங்களை நேரடியாக பார்க்கலாம் என்று நம்புகிறேன்...
சீதாலக்ஷ்மி மேடம் ஒன்றிரண்டு வாக்கியத்திலேயே 'பன்ச்' வாதம் செய்வார்கள் என்றால் நீங்கள் பெரிய பெரிய (பக்கம் பக்கமாக) வாதங்கள் எல்லாம் செய்வீர்கள் என்று கேள்வி... எப்படியோ இந்த முறை பட்டிமன்றம் ரொம்பவே வித்தியாசமாக இருக்க போகிறது என்று நினைக்கிறேன் :)

இதற்கு மேல் இங்கு இதையெல்லாம் சொன்னால், டீச்சர் வந்து சொல்ல விரும்பினேன் பக்கத்தில் இதை எல்லாம் பேச கூடாதுன்னு மிரட்டுவாங்க ;-) அதனால் இத்தோடு நிறுத்துகிறேன்... நேரம் கிடைக்கும் போது உங்களுடைய பிரசித்தி பெற்ற பழரசம் பற்றி சொல்லுங்கள் :)

இந்த நாள் உங்களுக்கு இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிரேமா ரொம்ப நல்ல விஷயம் செய்திருக்கீங்க. பாராட்டுக்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

இப்படிப் பட்ட குழந்தைக்களைப் பார்க்கும் போது என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அழ ஆரம்பித்து விடுவேன். என் மாமனாரின் நினைவு தினத்துக்கு ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு உணவளித்து எங்கள் குடும்பத்தினர் அவர்களோடு இணைந்து சாப்பிடுவது மட்டுமே அவருக்கு நாங்கள் செய்யும் நினைவஞ்சலி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்