அஜுனமோட்டோ என்றால் என்ன

ajunamoto nalatha keduthala(enda vagaiil)? idhala heart attack varumamai

அஜுனமோட்டோ என்றால் என்ன?

ramba

சைனா சால்ட் (China salt) என்று அழைக்கப்படும் அஜினோமோட்டாவிற்கும் (ajinomoto), சைனாவிற்கும் நேரடி தொடர்பு எதுவும் கிடையாது. "ட்டோ" என்று பெயர் முடிவதில் இருந்தே நாம் யூகித்துவிடலாம். இது ஒரு ஜப்பானிய பெயர் என்று. Essence of taste என்ற பொருள்படும் அஜினோமோட்டோவின் அறிவியல் பெயர் மோனோ சோடியம் க்ளுடாமேட் (Monosodium glutamate) MSG என்று சுருக்கமாக சொல்வார்கள். COOH(CH2)2CH(NH2)COONa இதுதான் பார்முலாவாம். முடிந்தால் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

மோனோ சோடியம் க்ளுடாமேட்டிற்கு இன்று அஜினோமோட்டோ என்றப் பெயரே நிலைத்துவிட்டது. உலகளவில் அஜினோமோட்டோ நிறுவனம்தான் அதிகம் இதனைத் தயாரித்தாலும், வேறு பல நிறுவனங்களும் இதனை தயாரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் அஜினோமோட்டோ என்றப் பெயரிலேயே விற்பனையும் செய்கின்றன. ஆரம்பத்தில் ஒரு வகை கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்பட்ட அஜினோமோட்டோ, தற்போது கோதுமை, பீட்ரூட், கரும்பு என்று பலவித உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

அஜினோமோட்டோ ஒரு சுவையூக்கி (ஆஹா.. flavour enhancer என்பதற்கு ஒரு தமிழ்ப்பெயர் கண்டுபிடித்துவிட்டேன்.) அதாவது உணவின் சுவையைக் கூட்டுவது இதன் வேலை. உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள பல்வேறு வகையான அமினோ அமிலங்களில் (amino acids), இந்த க்ளுடாமேட் ம் (Glutamate) அடங்கும். புரதச்சத்து (Protein) மிகுந்த உணவுப்பொருட்களில் இவை மிகுதியாய் இருக்கும். இந்தகைய உணவுப் பொருட்களின் மூலக்கூறுகள் அமைப்பில் தனித்து, சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கும் க்ளுடாமேட்கள் உணவுப் பொருட்களின் சுவைக்கு காரணமாய் அமைகின்றன. தக்காளி, வெண்ணெய் போன்றவற்றில் இம்மாதிரியான க்ளூடாமேட்கள் இருப்பதால், இயற்கையாகவே அவை சுவைகூட்டப் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மோனோ சோடியம் க்ளுடாமேட், தண்ணீரில் கரைந்து சோடியம், க்ளுடாமிக் அமிலம் எனப் பிரிந்து உணவிற்கு சுவை சேர்க்கின்றது.

ஒருபக்கம் அஜினோமோட்டோ பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் குவிந்து கொண்டிருக்க, மறுபக்கம் அதன் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் சாமி சத்தியமாக அதில் கெடுதலே இல்லை என்று சூடம் ஏற்றி அடிக்காத குறையாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பொதுவான கருத்து, மிகக் குறைவாய் சேர்த்துக் கொள்வதினால் அதிகம் பாதிப்பு இல்லை என்பதுதான்.

அஜினொமோட்டோ - Monosodium Glutamate

இதை கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உண்ணக்கூடாது. மற்றவர்கள் குறைந்த அளவு சேர்த்து கொள்வதினால் பாதிப்பு இல்லை. Monosodium Glutamate நம்முடைய நாவில் உள்ள சுவை நரம்பை suppress செய்துவிடும். இதனால் மூளை நரம்புகளும் பாதிக்கப்படும். நாம் Monosodium Glutamate சேர்த்துள்ள உணவை உண்ணும் போது நிறைய உண்ண தூண்டும்.

MSG (monosodium glutamate) is a chemical used to hide unpleasant or stale tastes. It causes toxic, not allergenic, reaction in all people, adversely affecting the digestive, circulatory, and central nervous systems.

<B>MSG is of concern because it crosses a safety net, called the blood brain barrier, which separates the brain from the rest of the body. MSG “tricks” the brain into thinking that the food you are eating tastes good, causing you to consume more and more of the product. </B>

source : http://www.truestarhealth.com/members/archives.asp?content=12ml3p1a129

நன்றி...

அன்பு அட்மின்,
அஜினொமொட்டொ - விரிவான தெளிவான பயனுள்ள விளக்கத்திற்க்கு மிகவும் நன்றி!
MSG???!!! I used to say "NO MSG" when I go to Chinese restaurant. But I never knew that that is "Ajinomoto".

அஜினோமோட்டோ என்ற சுவைகூட்டியைப் பற்றி எனக்கு தெரிந்த கருத்துக்கள் சில:

1920 - ல் ஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அஜினோமோட்டோ, ஆரம்பத்தில் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் பயன்படுத்தப்பட்டு, தற்போது சில பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலிருந்து, துரித உணவு உணவகங்கள் மற்றும் வீட்டு சமையலறைவரை நுழைந்துவிட்டது. இதை எப்போதாவது மிகக் குறைந்த அளவில் பயன்படுத்துவதில் பாதிப்பு இல்லையென்றாலும் அதை பயன்படுத்தாமலே இருப்பதுதான் மிக நல்லது. காரணம், பல மருத்துவ ஆராய்ச்சிகள், இந்த அஜினோமோட்டோ மக்களின் உடம்பில் நச்சுத்தன்மையைதான் ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளையும் ஏற்படுத்துவதாக அறிவிக்கின்றன.

அதாவது, அஜினோமோட்டோ கலந்த உணவுப்பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத்தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறைகிறதாம். இது மூளையில் உள்ள 'ஆர்குவேட் நியூக்ளியஸ்' என்ற பகுதியை பாதிப்பதால் உடலின் எடை தாறுமாறாக அதிகரிக்கிறது. மந்த தன்மை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்றவற்றில் அழற்சியையும் சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துவதால், குழந்தைகளுக்கு காரணமில்லாத வயிற்றுவலி ஏற்படுகிறது. பொதுவாக இது மூளை நரம்புகளை பாதிப்பதால் பெரும்பாலோருக்கு அதிகமான ஞாபக மறதி, இனம்புரியாத தலைவலி, திடீர் வாந்தி அல்லது குமட்டல், செரிமாணக்கோளாறு, தூக்கப் பிரச்சனைகள், சோம்பல், அசதி, முடிகொட்டுதல் போன்றவை ஏற்படுகிறது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதியும் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைவதாகவும் மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருப்பதாக கூறுகிறார்கள்.அதனால் இயன்றவரை நாம் அதை தவிர்த்துக்கொள்வதே நல்லது.

சில மருத்துவ வெளியீடுகளின் மூலம் படித்து அறிந்த இந்த செய்திகள் அனைவருக்கும் பயன்படவே இந்த தலைப்பில் பதிவு செய்தேன். நன்றி!

மேலும் சில பதிவுகள்