ஹோல்வீட் தோசை

தேதி: July 15, 2012

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

முழு கோதுமை -2 கப்
இட்லி அரிசி – 1 கப்
உளுந்து –கால் கப்
சின்னவெங்காயம்-10 (அ) பெ.வெங்காயம் -1
சின்ன தக்காளி -1
சீரகம்-1டீஸ்பூன்
பச்சை மிளகாய்-4(காரத்திற்கேற்ப)
கொத்தமல்லிதழை-ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி
இஞ்சி-1 துண்டு
கேரட் துருவல் – ½ கப்(விருப்பப்பட்டால்)

உப்பு-தேவைக்கு
எண்ணை-தேவைக்கு


 

கோதுமையையும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 8 மணி நேரம்
ஊறவைக்கவும்
பின் கழுவி களைந்து அரைக்க தேவையானவை எல்லாம் கலந்து மைய தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்..எடுக்குமுன் உப்பு கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின்பு தோசைக்கல்லில் திட்டமான தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணைவிட்டு மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
விருப்பமான சட்னி,குருமா,சாம்பார்,குழம்பு வகைகள் வைத்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இளவரசி... பழைய குறிப்பை எடுத்து சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும்,
தேவையான பொருட்களில் சொன்ன வெங்காயம், சீரகம், தக்காளி எப்போது சேர்க்க வேண்டும்..

வனி, சுவர்ணா, நித்தி...தோழிகள்.. யாருக்கு தெரிந்தாலும்... சொல்லுங்க