கட்டோரி சாட்

தேதி: July 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (9 votes)

 

கட்டோரி செய்ய:
மைதா - ஒரு கப்
ரவை - 2 தேக்கரண்டி
உப்பு
ஓமம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
ஸ்டஃபிங் செய்ய:
பட்டாணி / வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2 சின்னது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
மேலே தூவ:
கொத்தமல்லி இலை
சேவை
சாட் மசாலா


 

மைதா, ரவை, உப்பு, ஓமம் கலந்து தேவையான நீர் விட்டு பிசைந்து வைக்கவும். பட்டாணி, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும்.
மைதாவை திரட்டி வட்டங்களாக வெட்டி எடுக்கவும். அல்லது சின்ன சின்ன வட்டங்களாக ஒரே அளவில் தேய்த்து வைக்கவும்.
எந்த கப்பின் வடிவத்தை கொடுக்க விரும்புகிறோமோ அந்த கப்பின் பின் பக்கத்தில் இந்த மாவை ஒட்டி ஓரங்களை மடித்து விடவும்.
பின் அதன் மேல் ஃபோர்க் கொண்டு குத்தி விடவும். அப்போது தான் பூரியாக உப்பி வராமல் இருக்கும்.
இனி கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடுக்கி கொண்டு கப்களின் வாய் பகுதியை பிடித்து கொண்டு எண்ணெயில் விடவும். லேசாக கத்தியால் மாவை கப்பிலிருந்து விலக்கி விடவும். இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுக்கவும். இப்போது சாட் நிரப்ப கட்டோரி தயார்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி தேவையான உப்பு சேர்த்து வேக வைத்த பட்டாணி, உருளை சேர்த்து கலந்து எடுக்கவும்.
இனி கட்டோரியில் உருளை பட்டாணி கலவையை நிரப்பி மேலே விருப்பம் போல் கொத்தமல்லி இலை, சேவ், சாட் மசாலா தூவி சூடாக உடனே பரிமாறவும். சுவையான கட்டோரி சாட் தயார். கலவையை உள்ளே வைத்த பின் தாமதிக்காமல் பரிமாறுவது அவசியம், இல்லை எனில் கட்டோரி ஊறி நமத்தது போல் ஆகி விடும்.

உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்டோரிகளை தயார் செய்யலாம். அதுக்கு ஏற்ற ஸ்டெயின்லஸ் ஸ்டீல் அல்லது அலுமினிய கப்கள் மட்டுமே தேவை. கப்பில் எண்ணெய் ஆனால் மீண்டும் துடைத்து விட்டு மாவை ஒட்டவும். எண்ணெயாக இருக்கும் கப்பில் ஒட்டினால் சூடான எண்ணெயில் விடும் போது வடிவம் இல்லாமல் வழுக்கி கொண்டு போய் விடும். சமையலில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இடுக்கியில் பிடித்து உள்ளே விடும் போது கடாயின் நடு பகுதியில் கையை நீட்டிவிடாமல் இருப்பது முக்கியம். நீங்கள் மெதுவாக மாவை விலக்கி விடும் முன் கை சுட்டு விடும் எண்ணெய் சூட்டில். அதனால் ஒரு ஓரமாக வைத்து விலக்கி விடவும். இது போல் கட்டோரி செய்து ஜிப் லாக் பேக்கில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை பயன்படுத்தலாம். ரவை சேர்ப்பதால் மொறு மொறுப்பு குறையாமல் இருக்கும். உள்ளே வைக்கும் ஃபில்லிங் முழுக்க முழுக்க உங்கள் சாய்ஸ். வெறும் உப்பு போட்டு வேக வைத்த உருளை, பட்டாணி கலவையில் இனிப்பு கார சட்னி ஊற்றி கூட செய்யலாம். தயிர் சேர்க்கலாம். மேலே மாதுளை முத்துக்கள் தூவலாம், பூந்தி பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

romba alaga porumaya panirukeenga. valthukal

madhu

வாழ்த்துகள்
கட்டோரி சாட் பார்க்க அழகா இருக்கு. முயற்சி செய்து பார்க்கிரேன். அந்த க்டைசி பிளேட் கட்டோரிய அப்படியே பார்சல் பண்ணிடுங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அக்கா,
கட்டோரி சாட் சூப்பரா இருக்கு. உங்க குறிப்புகளில் எனக்கு ரொம்ப பிடிச்சது basic பொருட்கள் மட்டும் வச்சு வித விதமா செய்யறது :) கட்டோரிகான கப் ஐடியாவும் பிடிச்சுருக்கு :) வரும் வீக்கென்ட் முயற்சி செய்ய முடியுமானு பார்க்கறேன் அக்கா.
உங்க டிப்ஸ் ரொம்ப உபயோகமா இருக்கு. குறிப்பா பொறிக்கறது பத்தி சொல்லிருப்பது :)
அன்புடன்,
சந்திரா

Superb... Superb... Superb... Kalakkal akka... Epdi neenga mattum different ah think panni panringalo... Unga kukkoo nest madhiri idhuvum super akka...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

superb akka, seekarame saithu pakuren, nenga enna room pottu yosipingala

செமையா இருக்கு அக்கா உங்களோட கட்டோரி சாட் அக்கா எனக்கு ஒரு டவுட் அந்த மாவு செய்த கப் எண்ணையில் போடும்போது உள் பாகமா வேகாம இருக்குமா இல்ல எல்லா பாகுமும் வெந்து இருக்குமா அக்கா என நீங்க காண்பித்த போட்டோல உள் பக்கம் நல்லா வெளையா இருக்கு வெளி பக்கம் நல்லா கோல்டன் பிரவுன் கலர்ல வெந்து இருக்குல அக்கா அதான் என் டவுட் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

செமையா இருக்கு அக்கா உங்களோட கட்டோரி சாட் அக்கா எனக்கு ஒரு டவுட் அந்த மாவு செய்த கப் எண்ணையில் போடும்போது உள் பாகமா வேகாம இருக்குமா இல்ல எல்லா பாகுமும் வெந்து இருக்குமா அக்கா என நீங்க காண்பித்த போட்டோல உள் பக்கம் நல்லா வெளையா இருக்கு வெளி பக்கம் நல்லா கோல்டன் பிரவுன் கலர்ல வெந்து இருக்குல அக்கா அதான் என் டவுட் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

kani konjam thelivaa yepti tamila type pandrathunu sollunga,tamil yezhuthu uthavi ponen,next two box varuthu athi type panni yepdi send pannanum,onnume theriyala makku thaan naan

வனி
நிரைய கட்டோரி செய்து வச்சிகிட்டா டக்கென ஸ்னாக்ஸ் தயார். ம் ம் ரெடி வனி சாப்பிட

பார்க்கவே சூப்பரா இருக்கு. எளிமையாகவும் தெரிகிறது... அதே கப் கூட இருக்கு. செய்து பார்த்துவிட்டு சொல்றேன்!!!

ஈஸி பண்ண கூடிய ஸ்நாக்ஸ் வனி, கனிமொழி கேட்ட அது டவுட் தான் எனக்கும். அந்த கப் முழுவதும் மூழ்கும் அளவு என்னை ஊத்தி பொறிக்கனுமா? மத்தபடி எல்லாம் பிரமாதம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

மகாலக்‌ஷ்மி... மிக்க நன்றி :)

மஞ்சு... மிக்க நன்றி. செய்து பாருங்க... அதுக்குள்ள பார்சல் வந்துடும். :)

சந்திரா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க, சுலபமா செய்யலாம். :)

நித்யா... மிக்க நன்றி. வித்தியாசமானது எல்லாம் இல்லங்க, a2b’ல இது போல் கட்டோரி பார்த்திருக்கேன், அதான் ட்ரை பண்ணேன். நான் அவங்க செர்வ் பண்ணி பார்க்கல, ஆனா அந்த கப் சாட்டுக்குன்னு தெரியும், அதான் எனக்கு தெரிஞ்ச முறையில் ட்ரை பண்ணேன். :)

யக்தி... மிக்க நன்றி. மேலே சொல்லிருக்கேன் பாருங்க ஐடியா எப்படி கிடைச்சுதுன்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கனி... மிக்க நன்றி. நல்லா திருப்பி இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கணும் கனி. மூழ்க எண்ணெய் வெச்சா சரியா வரும். நான் போட்டோ எடுக்கன்னு முதல்ல கொஞ்சம் 3/4 பதத்தில் எடுத்திருக்கேன், காரணம் முழுக்க சிவந்தா படத்தில் கப் வடிவம் தெரியலன்னு :) அதை மீண்டும் எண்ணெயில் முழுசா பொரிச்சு தான் ஃபில் பண்ணிருக்கேன். இரு பக்கமும் சிவந்தா தான் க்ரிஸ்பியா இருக்கும்.

நிகிலா... மிக்க நன்றி. ஆமாம் நானும் நிறைய செய்து வெச்சுகிட்டு மாலை நேர டீ பார்ட்டிக்கு பயன்படுத்துவேன். :)

சுபா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :) எப்படி வந்ததுன்னு சொல்லுங்க.

சுகி... மிக்க நன்றி. அதே பதில் தான்... கலர் ஒன்னு போல வந்தா போட்டோவில் அந்த கப் குழி தனியா தெளிவா தெரியலன்னு உள்ளே லைட்டா இருக்கும் போதே எடுத்து படம் எடுத்தேன். அப்பறம் மீண்டும் பொரிச்சேன். அதனால் நீங்க இரண்டு பக்கமும் எண்ணெய் பட்டு நல்லா சிவக்க எடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்டோரி சாட், மாவுலயே பௌவ்ல் மாதரி செஞ்சு சூப்பரா இருக்கு வனிதா. ஒவ்வரு குரிப்பும் மெனக்கெடுத்து வித்யாசமா கொடுக்க நள்ளா முயர்சி பன்ரிங்க கண்டிப்பா சமைத்து பாக்குறேன். மைதாவில் பன்ற எல்லாமே எனக்கு ரெம்ப பிடிக்கும்.

வனி,

இது போலே கட்டோரி செய்யவே அச்சுமுறுக்கு கரண்டி போலே ஒரு trayகரண்டியை சாட் கடையில் பார்த்திருக்கிறேன்..
ஆனால் நீங்கள் simplified version தந்து இருக்கீங்க..
செய்துடலாம்

என்றும் அன்புடன்,
கவிதா

கட்டோரி சாட் பார்க்கவே சாப்பிட ஆசை தூண்டுது. வாழ்த்துக்கள்.

நிச்சம் செய்து பார்க்கிறேன்.

எனக்கு இங்கே ஓமம் கிடைக்காது, இதை ஓமம் சேர்க்காமலும் செய்யலாமா மற்றும் எனக்கு பட்டாணி அல்லது கொண்டாய் கடலை இரண்டுமே எனக்கு அலர்கி ஆகும், சோ வெறும் உருளைகிழங்கு வைத்து செய்தால் சுவை நல்ல இருக்குமா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு வனிதா,

பார்க்கறதுக்கும் அழகு, எப்படி சுலபமாக செய்யறதுன்னு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கீங்க.

பாராட்டுக்களும், நன்றியும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஃபில்லிங் இஷ்டம் போல் வைக்கலாம் என்பதால் கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்

வனிதா உங்க கட்டோரி கப் பார்க்கும் போதே இதை செய்ய தூண்டுது. நிச்சயம் செய்து பார்த்திட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.
அபி.

வாழ்க வளமுடன்

மகா சிவா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :)

கவிதா... மிக்க நன்றி. ஆமாம் இதுக்குன்னு கடைகளில் அலுமினியம் கரண்டி கிடைக்குது. ஆனால் அதெல்லாம் வாங்கி வெச்சு நமக்கு பயன்படாதுன்னு நான் வாங்குறதில்லை :) கூடவே ஒரே ஷேப்பில் எத்தனை நாள் செய்வது?

பிரேமா... மிக்க நன்றி. தாராளமா ஓமம் இல்லாம செய்யலாம். ஃபில்லிங்க்கு உருளை கூட மற்ற காய் சேர்த்துக்கங்க... சமோசா போல கேரட், கோஸ் இது கூட சேர்க்கலாம். கேப்சிகம் பயன்படுத்தலாம். பார்ட்டிக்கு இதில் நான் வெஜ் கூட ஃபில்லிங் வைக்கலாம். வித விதமா ட்ரை பண்ணுங்க. :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. நான் எப்பவும் வெஜ் கொடுப்பதே அதிசயம்... அதனால் செய்து பார்க்கணும். ஒக்கே?? ;)

இமா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு பிடிச்சுதான்னும் சொல்லுங்க. :)

அபி... மிக்க நன்றி. கட்டாயம் செய்து எப்படி வந்ததுன்னும் சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hai vanitha,unga kattori chat simply superb..kandippa try panren..
then indha kattori senju zip lockla potu use pannalaamnu sollirukeenga..fridgela vaikanuma illa velila vachaale nalla irukkuma??

மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. ஃப்ரிட்ஜில் போடுங்க செய்து. :) ஜிப் லாக் பேக்கில் போடும் முன் சூடு இல்லாம பார்த்துக்கங்க. வெளியவும் வைக்கலாம், ஆனா ரொம்ப நாள் தாங்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகோ அழகு....அவ்வளவு அழகு..
குறிப்பா படமா முறையா எத சொல்ல எத விட
இப்படியெல்லாம் எப்படிங்க..செய்யறீங்க..
ஆசையா இருக்கு ஆனா வருமான்னு தெரியல...
உங்க குக்கூநெஸ்ட் செய்ய இன்னும் ட்ரைதான் பண்ரேன்

உங்களை மாறி ஒருத்தர் விடாம மிஸ் பண்ணாம பார்த்து பின்னூட்டம் பதிவு போட ஊக்கம் தர என்னால மிடியல..:(

வாழ்த்துக்கள் அருமை குறிப்பிற்கு(இத டீபால்ட் ஆப்ஷன்ல வெச்சுட்டு நான் பார்க்க தவறிய குறிப்புகளுக்கும் போட்டுக்க முடியுமா :))

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மிக்க நன்றி. என்னை விடாம ஓட்டுறதுன்னு முடிவா இருக்கீங்க எல்லாரும் ;) டைம் கிடைக்கும் போது செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி தாமதமான பதிவுக்கு சாரி.செய்து பார்த்துட்டு பதிவு போடனும்னுதான். என் குட்டிஸ்க்கு ரொம்ப பிடிச்சுடுச்சுபா.சுப்பர் போங்க போட்டாச்சு

Be simple be sample

என்னங்க சாரிலாம் சொல்றீங்க... நீங்க செய்து சொல்றதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கு... அதுக்காக நான் காத்திருப்பேனே :) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, உங்க குட்டீஸ்க்கு பிடிச்சுதுன்னு கேட்க. ரொம்ப ரொம்ப நன்றி ரேவதி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி என்ன நன்றிலாம் நமக்குள்ளே. fb arusuvai groupla photoபோட்டுlike வாங்கியாச்சு

Be simple be sample

ஒரு வழியா செய்து பார்த்தாச்சு.. உள்ளே வைக்கும் ஃபில்லிங் முளை விட்ட கொண்டக்கடலையில் செய்தேன். வித்தியாசமாக இருந்தது... எல்லாருமே விரும்பி சாப்பிட்டாங்க!!! என்ன ஒன்னு, ஒரு சில கட்டோரி மட்டும் கப்பாக இல்லாமல் ப்ளேட் மாதிரி ஆகிடுச்சு....

ஆகா... செய்தாச்சா? நல்லா ஒட்டாம எடுத்திருப்பீங்க, இல்லன்னா கப்ப்ல் எண்ணெய் பட்டிருக்கும்... அதனால் தான் தடு போல் விரிந்து போகும். அடுத்த முறை நல்லா ஒட்டிவிட்டு எண்ணெய் கப்பில் ஆயிடாம சுத்தம் பண்ணி ஒவ்வொரு முறையும் ஒட்டுங்க. :) மிக்க நன்றி சுபா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்டோரி சாட் ரொம்ப அழகா இருக்கு எப்படி இப்படியலாம் யோசிகிரிங்க சூப்பர்ர்ர்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா