டூனா சாண்ட்விச்

தேதி: July 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

டூனா மீன் - ஒரு டின்
மயோனீஸ் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
ப்ரெட் - 2


 

வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். மயோனீஸ் மற்றும் டூனாவையும் எடுத்துக் கொள்ளவும்.
டூனா டின்னை திறந்து அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் அதை உதிர்த்து கொள்ளவும்.
அதோடு நறுக்கிய வெங்காயம் மற்றும் மயோனீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ப்ரெட்டை டோஸ்ட் செய்து, இரண்டு ப்ரெட் துண்டுகளுக்கு நடுவில் இந்த கலவையை வைத்து மூடினால் சுவையான, ஆரோக்யமான, எளிதில் தயாரிக்கக்கூடிய சாண்ட்விச் தயார்.

இது பிரயாணங்களின் போதும், காலை உணவிற்கும் ஏற்றது. பெரியவர்கள் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்றது. இதே போல் டின்னில் வரும் Turkey, chicken ஆகியவற்றிலும் தயாரிக்கலாம். எளிதானது, சத்தானது, சுவையானது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Abi... Irandavadhu kurippum super pa. Simple dish easy ah seiyalam. But enaku toona fish na sathyama theriyadhu pa. Seekirame koottansoru vil inaya vazhthukkal abi...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

டியர் அபி, இதோடு கூட கொஞ்சம் கேரட் துருவல்,கொத்தமல்லிகூட சேர்த்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் எப்போதும் எங்கள் எல்லோருக்கும் பிடித்த சான்விச். குறிப்பா என் மகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட்,கொத்தமல்லி எல்லாம் சேர்ப்பதால் பிள்ளைகளுக்கு சத்தான உணவும் கூட.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் அபி
ஈசியான ரெசிபி
ஆனா டுனா மீனுக்கு எங்கே போக

நல்ல ஐடியா... டூனாவும் இருக்கு, ப்ரெட்ம் இருக்கு... செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டூனா சான்ட்விட்ச் சுவையே சுவைதான். நான் தயிர் மற்றும் பார்ஸ்லெய்(parsley) உடன் சாப்பிட்டது.இதையும் முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கள் நல்ல குறிப்புக்கு.

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

டூனா சாண்ட்விச், இவ்லோ ஈசியா இருக்கே.அபி இந்த டூனா அமேரிக்கன் ஸ்டோரில் கிடைக்குமா? எங்க வாங்கலாம் சொன்னால் வாங்கி செஞ்சு பாக்கலான்னு நினைக்கிறேன். டூனாவ வேகவைக்க வேண்டாமா?

அபி,

எளிமையான டூனா சாண்ட்விச்...
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி...

நித்யா - முதலாவதா வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நித்யா :)
க்ரேஸ் - உங்கள் வாழ்த்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி.. இது என் மகளுக்கும் மிகவும் பிடித்த சான்ட்விச்.
நிகிலா - அதானே ஊரில் இது இருக்கானு எனக்கு தெரியலயே.. நிகிலாவுக்கு டூனா மீன் பார்சல்..
வனிதா - ஈசியா செய்யலாம்.. செய்துபார்த்திட்டு சொல்லுங்க வனி. மிக்க நன்றி.
Jaypon - உண்மைதான். நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பார்க்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
மகா - இது ரொம்ப ஈசிபா. american store கிடைக்கும்னுதான் நினைக்கிறேன். இங்க எல்லா food storeலும் இருக்கும். இதை வேக வைக்க தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம் :)
கவிதா - உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
பி.கு : தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும். :(
நன்றி. அபி.

வாழ்க வளமுடன்

சிம்பிளாக சட்டென்று செய்வது போல் ஒரு சான்விச். நன்றாக இருக்கிறது அபி.

‍- இமா க்றிஸ்

டூனா சாண்ட்விச் சூப்பர். கரக்ட்டா பார்ட்டியில் டோஸ்ட் பண்ண போக 4 ஸ்லைஸ் மிச்சம்... முடிச்சுட்டேன். :) அருமையாக இருந்தது அபி. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அபி,

நேற்று உங்களோட டூனா சான்ட்விச் செய்தேன். ரொம்ப ஈசியா, டேஸ்டியா இருந்தது... எனக்கும் என் பொண்ணுக்கும் பிடிச்சிருந்தது. :) நல்லதொரு ஈசி குறிப்புக்கு நன்றி அபி!

அன்புடன்
சுஸ்ரீ