மீன் குழம்பு

தேதி: July 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (9 votes)

 

சதை பற்றான மீன் - 6 - 8 துண்டுகள்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
தக்காளி - ஒன்று
மாங்காய் - 5 துண்டுகள்
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
கெட்டியான முதல் தேங்காய்பால் - கால் கப்


 

முதலில் மீனை நன்கு சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி, மாங்காய் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது புளி கரைசல் ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
எண்ணெய் பிரிந்து வரும் போது மீன் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்
பின்பு தேங்காய்பால் விட்டு கொதிக்க வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான தேங்காய்பால் மீன் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் அசைவத்தில் இதுவரை மாங்காய் சேர்த்து செய்ததில்லை... நல்லா இருக்கு :) ட்ரை பண்றேன் அவசியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி ,வனி
சூப்பர் மீன்குழம்பு
வனி மீன் ,கருவாட்டு குழம்பு ரெண்டுக்கும் மாங்காய் போடலாம் நல்லா மேட்ச் ஆகும்

சூப்பர் மீன் குழம்பு ரொம்ப டெம்டிங் ஆ இருக்கு பாக்கவே

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

படங்கள் தெளிவோடு பளிச்சினும் இருக்கு. அதும் அந்த கடைசி படம் வராத பசியையும் சுண்டி இழுக்குது... நான் இதுவரை தேங்காய் சேர்த்து செய்தது இல்லை. நேரம் கிடைக்கும்போது உங்கள் குறிப்பு படி செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

உங்க கடைசி படம் பார்க்கும் போது அதை அப்படியே சாப்பிடனும்னு தோணுது. இதுக்காகவே மாங்காய் வாங்கி செய்துட்டு சொல்றேன். mmmmmmmmmmm so yummy. வாழ்த்துக்கள் கவி..
அபி.

வாழ்க வளமுடன்

பாக்கவே ரெம்ப அழகா இருக்கு. கவிதா இது டிலாப்பியா மீன் தானே? நாங்கலும் இதுதான் வாங்கி குழம்பு வைப்போம். ஸ்கின்னோட இருந்தால் ரெம்ப நாள்ளா இருக்கும், வாழ்த்துக்கள்....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கும் நன்றி..

வனி,
மீன் குழம்பில் கத்தரி,மாங்காய்,பச்சை மிளகாய் இதெல்லாம் சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.
கண்டிப்பாக செய்து பாருங்க..

நிகிலா,
வருகைக்கும்,வனிக்கான பதிலுக்கும் நன்றி..

கனி,
செய்தும் பாருங்க.வருகைக்கு நன்றி..

பிரேமா,
செய்து பாருங்க..உங்களுக்கு பிடிக்கும்..வருகைக்கு நன்றி..

அபி,
செய்துவிட்டு சொல்லுங்க..வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி..

மகா,
ஆமாம் டிலாபியாவே தான்..
நான் தோலுடன் வாங்குவது இல்லை,இங்கே கிடைப்பதும் இல்லை.. :(
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
உங்கள் மீன் குழம்பு சண்டே செய்தேன்.. ரொம்ப நன்றாக இருந்தது...

என்னுடைய அம்மா தக்காளி சேர்க்க மாட்டார்கள்.. என்னுடைய கணவரின் அம்மா, தூள் எல்லாம் சேர்த்து வதக்கி விட்டு புளி சேர்ப்பார்கள்.. ஆக மொத்தம் ரெண்டு அம்மாவும் செய்யும் மீன் குழம்பின் mixtureஆக இருந்தது :)

மிக்க நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

unga website nalla iruku. recipesum nalla iruku. intha kulambu patha sapdanumpola iruku. na ithuvarai fish items senjathu ila. ithu pakumpothu seyanumnu asaya iruku.
Thanku. uk5mca.

இன்றைக்கு குழம்பு செய்தேன்... நல்ல டேஸ்ட்... நன்றி