காஷ்மீரி வெஜிடபுள்ஸ்

தேதி: July 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (4 votes)

 

பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் கலவை - ஒரு பெரிய பவுல்
தயிர் - அரை கப்
நட்ஸ் வகை - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பொடிக்க:
ஜாதிக்காய் - சிறிது
பட்டை - சிறிது
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு


 

இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை இடித்து வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை மிக்ஸியில் அல்லது கையால் பொடிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தூள் வகை, பொடித்த மசாலா சேர்த்து பிரட்டவும்.
வேக தாமதமாகும் பீன்ஸ், கேரட்டை முதலில் சேர்த்து பிரட்டி மூடி விடவும்.
அவை சற்று கலர் மாறும் போது காலிஃப்ளவர் சேர்த்து மூடி விடவும்.
லேசாக கலர் மாறும் போது சிறிது நீர் விட்டு காய்கள் 3/4 பதம் வெந்ததும் தயிர் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
காய்கள் வெந்து தயிர் மசாலாவுடன் கலந்து சேர்ந்து வரும் போது எடுக்கவும். நட்ஸ் வகைகள் பொடியாக நறுக்கி தூவி பரிமாறவும்.

காய்கலவை உங்கள் விருப்பமே. உருளை, கேப்ஸிகம், மஷ்ரூம் என எதை விரும்பினாலும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு வனிதா,

காய்கறிகளுடன் நட்ஸ் வகைகளும், மசாலாவும் சேர்த்து, சத்துள்ள, சுவையான குறிப்பு தந்திருக்கீங்க.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அக்கா, காஷ்மீரி வெஜிடபுள்ஸ் குறிப்பு ரொம்ப ஆசையா இருக்கு :) இப்படி ஒரு dry வெஜிடபுள்ஸ் குறிப்பு தான் தேடிட்டு இருந்தேன்! சீக்கிரம் செஞ்சுட்டு சொல்லறேன் அக்கா. நன்றி :)

அன்புடன்,
சந்திரா

வனிதா அக்கா : சூப்பரா இருக்கு அக்கா வெஜிடபுல்ஸ் மசாலா பாக்கும் போதே சாப்டனும் போல இருக்கு அக்கா அக்கா தயிர் சேர்த்து செஞ்சா அடி பிடிசுடாதா அக்கா இல்ல கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாமா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Akka... Photos parkave sema tempting ah iruku ka... Idhu crispy ah irukuma illa dry ah irukuma akka? Kani keatta madhiri thayir sertha adi pidikadha akka? Pls clear the doubts...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

தோழிகளே... தயிர் சேர்க்கும் போது நீர் சேர்க்கனும். சாரி, நான் அதை மிஸ் பண்ணிருக்கேன் எழுதும் போது. கனி, நித்யா மிக்க நன்றி. அட்மின்’கு மெயில் அனுப்பறேன் மற்ற.

சீதாலஷ்மி... மிக்க நன்றி :) இது சைவம் தான்... நேரம் கிடைக்கும்போது ட்ரை பண்ணி பாருங்க.

சந்திரா... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

கனி, நித்யா... ரொம்ப தேன்க்ஸ் நீங்க கேட்டதை பார்த்த பின் தான் கவனிச்சேன், நீர் சேர்ப்பதை சொல்ல மறந்திருக்கேன்னு. கொஞ்சமா சேர்க்கணும், மெயில் அனுப்பறேன் அட்மின்கு. குறிப்பில் அதை சேர்க்க. ரொம்ப நன்றிங்க :) அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காஷ்மீரி வெஜ்டப்ல்ஸ் கலக்கலா இருக்கு நான் அடுத்த வாரத்துல செஞ்சி பாத்துட்டு சொல்றேன் உங்கலுக்கு வாழ்த்துக்கள் வனிதா.

மிக்க நன்றி. உடனே மாற்றியமைக்கு. சாரி, இப்படி வேலை வெச்சதுக்கு, இனி கவனமா அனுப்பறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவையான டிரை வெஜிடபிள்ஸ். எனக்கு மிகவும் பிடிக்கும். வரும் பார்டிக்கு ஒரு புது ஐட்டம் கிடச்சாச்சு. தேங்க்ஸ் வனி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வனி,

அருமையான குறிப்பு..அதுவும் வெஜீசுடன் ..கண்டிப்பாக ட்ரை பண்ணுறேன்..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி மசாலா சேர்க்காமல் காய்கறி பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.கண்டிப்பா செய்துடுறேன்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

கவிதா... மிக்க நன்றி. நீங்க ட்ரை பண்றேன்னு சொல்றதே பெரிய சந்தோஷமா இருக்கு :)

சுவர்ணா... மிக்க நன்றி. ஆமாம் நல்லா சாப்பிட முடியும், மசாலா இல்லாததால் ஹெவியா இருக்காது. அவசியம் செய்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, வழக்கமாக நீங்க தர்ற குறிப்புகளில் இருந்து இது சற்றே வித்யாசப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். (அப்படியா?) கலர்புல்லான, அனைத்து காய்கறிகளின் சத்துக்களும் ஒருங்கே இணைந்த சத்தான, சுவையான சைட் டிஷ். ஒருமுறை மும்பையில் ஒரு ஹோட்டலில் கடாய் வெஜிடபுள்ஸ்னு ஒரு சைட் டிஷ் சாப்டிருக்கிறேன். அதை நினைவுபடுத்தியது இந்த குறிப்பு. இவை அனைத்தும் இங்கே எளிதில் கிடைக்க கூடிய காய்கறிகள் ஆகையால் நிச்சயம் கூடிய விரைவில் செய்துவிட்டு பதிவிடுகிறேன் . (நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையை தவிர வேறொன்றுமில்லை வனி.. என்னை நம்புங்க்க்க்க்க்கோ..) ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி
இன்று செய்தேன். ட்ரை வெஜ் ரொம்ப நல்லா இருந்தது. உடனே வந்து பதிவு போடறேன். அப்புறம் பேசுறேன். :)
நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹஹஹா... உண்மை தான். நான் அதிகம் காய்கறி குறிப்புகள் தருவதில்லை இப்போலாம். முன்பு கொடுத்து வந்தேன்... இப்போ ஒரே அசைவமா இருக்கு.

//நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையை தவிர வேறொன்றுமில்லை வனி.. என்னை நம்புங்க்க்க்க்க்கோ..)// - நம்பிட்டேன். செய்து சொன்னா இன்னும் நல்லா நம்புவேன். :)

மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி, இவ்வளவு வேலைக்கு நடுவே செய்ததும் பதிவு போட்டிருக்கீங்க. மகிழ்ச்சி ரம்யா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காய்கறிகள் கூட்டணியோடு இந்த டிஸ் பார்க்கவே பிரமாதமா இருக்கு... சூப்பர் வனி வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிக்க நன்றி. செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நேத்து உங்க காஷ்மீரி வெஜ்டப்ல்ஸ் சமைத்தேன் டேஸ்ட் ரெம்ப நள்ளா இருந்துச்சு, ரசம் சாதம் தயிர் சாதத்துக்கு வச்சி சாப்டும்போது அறுமையா இருந்தது நன்றி வனிதா,

நேற்று நைட் சப்பாத்திக்கு உங்களோட சைட் டிஷ் செய்தேன். கேப்ஸிகமும், மஷ்ரூமும் சேர்த்தேன். ரொம்பவும் ஈஸியான கலர்புல் ட்ரை டிஷ். சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன். சூப்பர்.

சத்யா

ஹாய் வனி அக்கா இன்று உங்கள் காஷ்மீரி வெஜிடபுள்ஸ் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.நன்றி

இதுவும் கடந்து போகும்

மகா... மிக்க நன்றி. இவ்வளவு சீக்கிரம் செய்து பார்த்து பின்னூட்டமும் தந்தமைக்கு நன்றி :)

சத்யா... மிக்க நன்றி. எனக்கு தெரிந்த தோழியும் இது போல் சப்பாத்திக்கு தான் செய்வார். செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி. :)

கவிதா... செய்து பார்த்து மறக்காமல் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
ஞாயிறு உங்கள் காஷ்மீரி வெஜிடபுள்ஸ் செய்தேன்... ரொம்ப நன்றாக இருந்தது... ரொம்பவே வித்தியாசமான டிஷ் ;-)

சாரி உடனே பதிவு போட மறந்துவிட்டேன் :(

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி ;) எம்புட்டு சீக்கிரம் நான் பதிவை பார்த்து பதில் போட்டுட்டேன் பாருங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா