உருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)

தேதி: July 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

1. உருளைக்கிழங்கு - 2 மீடியம் சைஸ்
2. மிளகாய் தூள் - தேவைக்கு
3. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
4. உப்பு - தேவைக்கு
5. கறிவேப்பிலை - 1 கொத்து
6. எண்ணெய் - 1/2 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாட்டில் மெல்லிய சிப்ஸாக நறுக்கி வைக்கவும்.
இவற்றை ஒரு மெல்லிய துணி அல்லது டிஷூ பேப்பரில் போட்டு வெளி வரும் நிரை லேசாக அழுத்தி எடுத்து விடவும்.
அவனை 200 C’ல் முற்சூடு செய்யவும்.
ஒரு தட்டில் மிளகாய், மஞ்சள், உப்பு கலந்து அதில் எண்ணெய் விட்டு குழைத்து கொண்டு அதில் இந்த சிப்ஸ் அனைத்தையும் போட்டு பிரட்டி விடவும்.
ஒன்று போல் கலந்து விட வேண்டும். கடைசியாக கறிவேப்பிலையும் சேர்த்து பிரட்டவும்.
அவன் ட்ரேவில் அலுமினியம் ஃபாயில் போட்டு அதில் ஒட்டாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கவும். அல்லது நான்-ஸ்டிக் அவன் பாத்திரமும் பயன்படுத்தலாம்.
மசாலாவில் பிரட்டிய சிப்ஸை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனி தனியாக இருக்கும்படி ட்ரேவில் வைக்கவும்.
இப்போது இதை அவனில் வைத்து 15 - 20 நிமிடம் வரை ஃப்ரை செய்யவும்.
சுவையான ஹெல்தியான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.


உருளையை நேரமும் பொறுமையும் இருந்தால் ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் மெல்லியதாக வெட்டலாம். இல்லை எனில் சிப்ஸ் போல் வட்ட வட்டமாக மெல்லியதா சீவி கொள்ளவும். சிப்ஸ்க்கு நறுக்க பயன்படுத்தும் slicer இருந்தால் இன்னும் சுலபம். உப்பு, காரம் அவர் அவர் விருப்பத்துக்கு சேர்க்கலாம். கறிவேப்பிலை விரும்பினால் சேர்க்கலாம். ஃப்ரை செய்யும் போது ஒரு முறை இடையில் எடுத்து ட்ரேவை திருப்பி வைக்கவும் (வெளியே இருந்த பக்கம் உள்ளும், உள்ளே இருந்த பக்கம் வெளியேவும் வரும்படி). ஒன்று போல் மொறு மொறுப்பாக வர இது உதவும். இடையில் சீக்கிரமே சிவந்து வறுபட்ட சிப்ஸ்களை அப்போதைக்கு அப்போதே நீக்கி விடவும். ஒரே அளவாக இருந்தால் எல்லாமே வறுபட நேரமும் ஒன்று போல் ஆகும். கையில் நறுக்கும் போது சற்று சிறிதும் பெரிதுமாக இருந்தால் நேரம் மாறுபடும். இதையே மைக்ரோவேவில் செய்ய ஹை மோடில் 2 - 5 நிமிடம் வைத்து எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மைக்ரோ ஓவன் உள்ள அலுமினியபாயில் வைக்கலாமா. தெரிந்தவர்கள் சொல்லவும்

மைக்ரோவேவில் அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தலாம்... ஆனால் அது உங்க மைக்ரோவேவ் அனுமதிக்கிறதா என்பதை இன்ஸ்ட்ரக்‌ஷன் மேனுயல் பார்த்து தெரிஞ்சுக்கங்க.

பொதுவா சொல்லணும்னா மைக்ரோவேவில் வைக்கும் உணவை அலுமினியம் ஃபாயில் ஷீட் போட்டு மூடி வைக்க கூடாது. மைக்ரோவேவ் அதை தாண்டி உணவில் படாது. உணவு குக் ஆகாது. சுருங்கிய ஃபாயில் ஷீட் பயன்படுத்தினால் ஸ்பார்க் வர வாய்ப்பு இருக்கு. இது போல் ரிஸ்க் நிறைய இருக்கு. அதனால் முடிஞ்ச வரை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கச்சி,
உருளைக்கிழங்கு சிப்ஸ் இன்று செய்தேன் :) சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி :)
மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி. உங்க ஐடியாபடி எங்க வீட்டு குட்டீஸ்க்கு நான் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பண்ண போறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா