மலபார் எக் கறி

தேதி: July 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

முட்டை - 6
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
முதல் தேங்காய் பால் - ஒரு கப்
இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு


 

முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும். சுவையான மலபார் எக் கறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹ்ம்ம் யம்ம்மியானோ அக்கா superrrrrrrrrrrrrrr டிஷ் அக்கா நா இன்னைக்கு லஞ்ச எடுத்துட்டு வரல அக்கா இத நான் எடுத்துப்பேன் அக்கா எனக்கு தான் அஞ்சு முட்டை ஹ்ம்ம் நா நாளிகே ட்ரை பனுவேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

tasty malabar egg kari..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி,
ரொம்ப அழகா ப்ரெசென்ட் செய்து இருக்கீங்க..
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி எக் கறி செம சூப்பரா இருக்குங்க கடைசி படம் ப்ரெசெண்டேசன் ப்ரமாதம் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி, மாலேலருந்து மலபார் எக் கறி - முகப்பில் அந்த பவுலை பார்த்ததும் கண்டுகிட்டோம் ;) பார்க்கும் போதே பசியை தூண்டி விடும் குறிப்பு. புதன்கிழமை செய்துட்டு சொல்லிடறேன் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. திங்கள் அன்று லன்ச் (முட்டை கறி) நல்லா இருந்ததா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மகபார் எக் கறி வித்தியாசமா இருக்கு... படங்கள் அனைத்தும் சூப்பர்... வாழ்த்துகள் வனி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்துட்டு சொல்லுங்க... நாளை தான் புதன். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, இன்று உங்களுடைய மலபார் எக் கறி தான் செய்தேன் (வாக்கு கொடுத்தபடி ;)) ஒரே ஒரு குட்டி மாற்றத்தோடு. நீங்க தக்காளி போடாம பண்ணியிருக்கீங்க. எனக்கு தக்காளி இல்லைனா தொண்டைக்குள்ளே இறங்காது. தக்காளி மட்டும் சேர்த்து செய்தேன். மிகவும் அருமை. படம் எடுத்து வச்சிருக்கேன். பேஸ்புக்கில் போடுறேன். நல்ல குறிப்புக்கு நன்றிகள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நீங்க போட்ட பதிவை பார்க்க கூட நேரமில்லாம போச்சு :) தக்காளி சேர்க்கலாம், தப்பில்லை. பிடிச்சதில் மகிழ்ச்சி கல்ப்னா. எப்படியோ கொடுத்த வாக்கை காப்பாத்திருக்கீங்க ;) ரொம்ப ரொம்ப நன்றி கல்பனா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்கள் மலபார் எக் கறி இன்று செய்தேன்.. அருமையாக இருந்தது... மிக்க நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இதை நாங்கள் முட்டை ஆணம் என்று சொல்லுவோம் நீங்கள் சொன்ன மாதுரியே தான் ஆனால் நாங்கள் தக்காளி சேர்ப்போம் இரண்டாவது பால் நல்லா கொதிக்குm போது ஒவ்வொரு முட்டையாக உடைத்து அதில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் அதை மூடி வைத்து பிறகு தலை பால் ஊற்றி இறக்குவோம் ஒவ்வொரு முட்டையும் தனிதனியாக வெந்து இருக்கும்.
இது இடியாப்பம் ஆப்பம் போன்றவைகலுக்கு நல்லா இருக்கும்.
ஆனால் வனிதா அக்கா வீட்டில் இடியாப்பம் சுட்டோம் நான் உங்கள் மலபார் எக் கறி செய்து பார்த்தேன் ரொம்ப சூப்பெர் தக்காளி போடாமல் நல்லா இருந்தது எங்க அம்மா எங்கே பார்த்தாள் என்று கேட்டாங்க உங்களை பற்றி சொல்லி கான்பித்தேன்

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

செய்துட்டீங்களா? பிடிச்சுதா? செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி பிந்து :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நீங்க சொன்ன முறையில் நான் முயற்சிக்கிறேன், நிச்சயம் வித்தியாசமா இருக்கும். அம்மாவிடம் என் குறிப்பை அறிமுகம் செய்தமைக்காக ஒரு ஸ்பெஷல் தேன்க்ஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா